பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறவாத பெயர்கள்! மங்காத பெயர்கள்! உடன்பிறப்பே, இந்தத் திங்கள் எட்டாம் நாள் இரவு புகைவண்டிப் பயணத்தின்போது அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை நிலையங்களில் ஆயிரக்கணக்கான கழகத்து உடன்பிறப்புக்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற நான்; மீண்டும் இரண்டு நாள் கழித்துப் பதினோராம் நாள் காலையில் அவ்வழியே பிருந்தாவனம் விரைவு வண்டியில் பெங்களூர் சென்றபோது காட்பாடியிலும், ஜோலார் பேட்டையிலும் முன்னைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக மான கூட்டத்தையும் ஆர்வத்தையும் காணமுடிந்தது. சென்னை நிலையத்தில் பளு தூக்கும் தொழிலாளர் களும், பயணிகளும் விசாரணைக் கமிஷன் நிதி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து பெங்களூர் கண்டோன் மண்ட் நிலையம் சென்று இறங்கும் வரையில் ஆயிரத்து எண்பத்து இரண்டு ரூபாய் சேர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் பொ பாழுது ஆர்வத்தின் அளவையாரும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஆகாகா! பார்த்தாயா! பார்த்தாயா! இரண்டு நாள் கழித்து அதே வழியில் செல்லும்போது கா காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும்தான் வரவேற்பு நடந்திருக்கிறது -முதலில் எட்டாம் தேதி வந்த அரக்கோணத்து மக்கள் யாரும் பதினோராம் தேதி வரவில்லை. கருணநிதியைப் புறக்கணித்துவிட்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/88&oldid=1695314" இலிருந்து மீள்விக்கப்பட்டது