பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 79 என்று யாராவது சொல்லக்கூடும். அப்படிச் சொல்வதிலே சிலபேருக்கு ஒரு ஆறுதல்! அவர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்துகிறேன்; பிருந்தாவனம் விரைவு வண்டி அரக் கோணம் நிலையத்தில் நிற்பதில்லை! என்று 6 - பகல் பனிரெண்டரை மணி அளவில் பெங்களூர் சென்றடைந்தோம். ரயிலில் இருந்து இறங்கிடவே முடிய வில்லை. 'ஓகோ! புரிகிறதா! இறங்காதே - திரும்பிப்போ! று கர்நாடக மக்கள் கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதனால்தான் கருணாநிதியால் கீழே இறங்க முடியவில்லை. ரயிலிலேயே இருந்து தவித்தார். புலம்பினார், அழுதார், அலறினார், என்று ஒரு சிலர் கதை கட்டித் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக்கொள்வார்களேயானால், அவர் களுடைய மகிழ்ச்சிக்குக் குறுக்கே நிற்க நான் விரும்ப வில்லை. 99 . உடன்பிறப்புக்களின் உற்சாகப் பெருவெள்ளத்தை எப்படி நீந்திக் கடப்பது என்று நான் திகைத்துக் கொண் டிருந்தபோது கர்நாடக மாநிலத்துக் காவல் துறையினர் கைகொடுத்தனர். அவர்கள் செய்திருந்த செம்மையான ஏற்பாடுகளினால் பெங்களூர் ரயில் நிலையத்தில் வரவேற்க வந்திருந்த அனைவரையும் பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் பார்த்துக்களித்திட முடிந்தது. க பெங்களூர் "நகர் மண்டபத்தில் அன் று மாலை "இலக்கியத்தில் நாம்" என்ற தலைப்பில் நான் இருந்தேன். பேச நுழைவுக் கட்டண நன்கொடைச் சீட்டுக்கள் வாயி லாக பனிரெண்டாயிரம் ரூபாய் வரையில் வசூலாகிவிட்ட தென்றும் அதற்குமேல் மண்டபத்தில் இடமில்லாத காரணத்தால் நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை நிறுத்தப் பட்டு விட்ட தென்றும் கர்நாடக மாநில அமைப்பாளர் திராவிடமணி அவர்கள் முதல் நாளே எனக்குத் தகவல் தந்திருந்தார். அந்த மகிழ்ச்சியுடன் பெங்களூரில் ரயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/89&oldid=1695313" இலிருந்து மீள்விக்கப்பட்டது