பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞர் நிலையத்தைவிட்டுக் காரில் ஏறிய என்னிடம் அவரே சொ சொன்னார், இன்று சிறப்புக்கூட்டம் இல்லை. டிக்கெட் வாங்கியவர்களும், மற்றும் கழகத்தினரும் பொதுமக்களும் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து நேரில் கண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று! 9 9 அந்தச் செய்தி எனக்கு ஒருவகையில் ஆறுதலை அளித்தது, மண்டபத்துக் கூட்டமென்றால் அந்த இடத்தில் என்னதான் மக்களைப் போட்டு அடைத்தாலும் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறுபேர் வரைதான் என்னைச் சந்தித் திடமுடியும்! அதுவும் தொலைவில் இருந்து! புதிய ஏற்பாட்டின் காரணமாக ஆயிரமாயிரம் உடன்பிறப்புக் களைச் சந்திக்கலாம் என்ற நிம்மதி ஏற்பட்டது! ச பெங்களூ ते மாதவ நகரில் உள்ள “ஓட்டல் ஹைலேண்ட்ஸ்' என்னும் இடத்தில் என்னைத் தங்கவைத் தார்கள். நான் பெங்களூர் செல்லும் நேரங்களில் பெரும் பாலும் அந்த இடத்தில்தான் தங்குவது வழக்கம். ஓட்டல் என்ற சூழ் நிலை இல்லாமல் ஒரு வீட்டுச் சூழ்நிலைபோல இருக்கும சென்ற ஆண்டுகூட நானும் என் மனைவியும் மகள் கனிமொழியும் மைசூர் சென்றுவிட்டுத் திரும்பும் போது அந்த ஓட்டலில் வந்து ஓரிருமணிநேரம் ஓய்வெடுத் துக்கொண்டோம். முன்பெல்லாம் நான் திரைக்கதை எழுதுவதற்கு பெங்களூரில் அந்த இடத்திற்குத்தான் செல் வேன். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாநில பழைய காங்கிரஸ் பொருளாளருமான திரு. ராமா ரெட்டி அவர்கள் தான் அந்த ஓட்டல் உரிமையாளர். பழகுவதற்கு இனிய பண்பினர். மாலை 4 மணிக்கு என்னைக் காணவந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் ‘"கியூ வரிசை' யிலே சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக அந்த ஓட்டலின் சுற்றடைப்புக்குள் வசதியாக நின்று செல்வ தற்கு அவர் இடமளித்ததும், டமளித்ததும், அந்த வரிசையும் ஒழுங்குற அமைவதற்குக் காவல்துறையினர் வழிவகுத்ததும் பாராட்டி நன்றி கூறத்தக்கவைகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/90&oldid=1695315" இலிருந்து மீள்விக்கப்பட்டது