பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் G 81* கர்நாடக மாநிலத்துக் கழகக் கண்மணிகளின் பேரார் வப் பெருங்கடலாக இருந்தது அந்தமாலை நேரத்து நிகழ்ச்சி! காசுகளாகவும் சிறுசிறு தொகைகளாவும் அருமைச் சகோதரர்களும், அன்புச் சகோதரிகளும் வழங்கிய அந்தக் காட்சி மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்த என் கால்வலியைக் கூடப் இருந்தது. "கருணாநிதியை வற்வேற்க ஆளே இருக்கமாட்டார்கள்” என் று பிரச்சாரம் செய்து கொண் கொண்டிருந்த சில நண்பர்கள் இந்தக் காட்சி கண்டு நழுவிவிட்டார்கள் என நமது கழகத்து மாநில நிர்வாகிகள் என்னிடம் கூறினார்கள். அன்று சிறப்புக் கூட்டத்தில் நான் பேசுவதாக இருந்த இலக்கியக் குறிப்பு ஒன்று என் நினைவுக்கு வந்தது. போக்கிடக்கூடியதாக 'உழுதூர் காளைஊழ்கோடு அன்ன கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப், புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும் புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின், பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய மன்றிற் பாயும் வன்புலத் ததுவே.... அதுவும் ஆம். உடன்பிறப்பே; கள்ளிக்காடாம்! எப்படிப்பட்ட கள்ளிச் செடியாம்? உழவு காளையின் கொம்பைப் போன்ற முட்களையுடைய கள்ளிப்புதர்! அதன் அடிபாகத்தில் இருந்துகொண்டே புதுவரகினை வீணாக்குகின்றன வயல் எலிகள்! அந்த எலிகளைக் கண்டதும் அவைகளைப் பிடிக்கக் கருதியிருந்த இளைஞர்கள். வில்லை எடுத்து ஒலி செய்கிறார்கள் மகிழ்ச்சியின் காரண மாக! வில்லின் ஒலிகேட்டு வேலி யோரத்தில் உள்ள குறுமுயல்கள் ஓட்டம்பிடிக்கின்றன. அவைகள் ஓடும் வேகத்தில் போகின்றன. மட்பாண்டங்கள் உருண்டு உடைந்து இந்தப் புகழ்மிக்க புறப்பாடலை இயற்றியவர் ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/91&oldid=1695316" இலிருந்து மீள்விக்கப்பட்டது