பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞர் இப்படிப் பல இலக்கியச் செங்கரும்புத் துண்டங்களைச் சுவைத்திடுமாறு எடுத்தளிப்பதற்கு எனக்கு அன்று வாய்ப் பில்லையாயினும்; என்னைக் காணவந்த கர்நாடகத்துக் கழக மணிகள் ஒவ்வொருவரும் ஒரு இலக்கிய வரியாகத்தான் என் கண்ணுக்குத் தோன்றினர். 8 6 அன்றைய கழக நிகழ்ச்சி, எதிர்பார்த்தற்கு மேலே எடுப்பாகவும், எழுச்சியாகவுமே அமைந்தது. அய்யோ நாம் எண்ணியதுபோல் ஆகவில்லையே!" என்று எரிச்சல் கொண்டவர்கள் வேறு யாருமல்ல; நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள்தான்! அவர்கட்கு நல்ல படிப்பினை வழங்கிய கர்நாடக மாநில கழக அமைப்புக்கும்; உடன்பிறப்புக்களுக்கும் என் இதய மார்ந்த வாழ்த்துக்கள்! நீண்ட நெடுங்காலமாக பெங்களூரிலும், சுற்றுப் பகுதிகளிலும் கழகத்தைக் கொள்கைப் பற்றோடு கட்டிக் காக்கும் செயல் வீரர்களான என் அன்பு உடன்பிறப் புக்கள் என் கண் முன்னால் இன்னமும் நின்று புன்னகை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்தம் பெயர்கள் அனைத்தும் என் நெஞ்ச ஏட்டில் எழுதப்பட்டுள்ளன. மறவாத பெயர்கள்! என்றும் மங்காத பெயர்கள்! . அன்புள்ள, மு.க. 13-6-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/92&oldid=1695317" இலிருந்து மீள்விக்கப்பட்டது