பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

او பிரதமரை வரவேற்கிறோம் உடன்பிறப்பே, ரஷ்ய யா சன்று பொதுவுடைமைப் பூங்காவாம் சோவியத் வுக்கு உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான இந்தி யாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திரும்பியிருக்கிறார்கள். இது வெறும் சுற்றுப்பயண நிகழ்ச்சி யாக இல்லாமல், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே புதிய ஒத்துழைப்புத் திட்டங்கள் அடங்கிய கூட்டறிக்கை யொன்றை பிரதமர் இந்திராகாந்தி அவர்களும், ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரஷ்நேவ் அவர்களும் கையொப்பமிட்டு வெளியிட்டதின் மூலம் உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அத்தியாயமாகத் ய திகழ்கிறது என்றே கூறலாம். . ய இந்தியாவில் ஜனநாயகத்தையும், உலகத்தில் அமைதி யையும் காப்பதற்கென அரும்பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் பண்டித நேரு அவர்கள் ஆவார்கள். குழுக்கள் சேராக் கொள்கையைக் கடைப்பிடித்ததின் வாயிலாக உலக நாடு களிடையே இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பெருமை நேரு அவர்களுக்கு உண்டு. சமாதான வெண் புறாக்களைப் பறக்கவிட்ட ந்திய நாடு, சீன ஆக்ரமிப்பின்போதும், பாகிஸ்தான் போரின் போதும், வங்கதேச விடுதலையின் போதும், தன் கைகளில் போர்க்கருவிகளை ஏந்திட வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக நேர்ந் ததை மறந்திட முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/93&oldid=1695318" இலிருந்து மீள்விக்கப்பட்டது