பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைஞர் நாடுகளிடையே உருவாகும் ராஜ தந்திரச் சூழ்நிலை களின் காரணமாக நட்பும் பகையும் மாறிமாறி வரும் எனினும்; அண்டை நாடுகளுடன் பகையை வளர்த்துக் கொண் ே போவது விரும்பத்தக்கதல்ல என்பதை இந்தியப் பிரதமர் திருமதி. காந்தி அவர்கள் அவர்கள் செயல் வடிவில் காட்டிவருகிறார்கள். பாகிஸ்தானுடன் கடந்தகால உறவுகள் மிகவும் கசப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது. இப்போது பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகிற முனைப்பான முயற்சிகள் இருபுறத்திலுமிருந்து மேற் கொள்ளப்பட்டுள்ளன. வங்கதேசம் பெரும் அவதிக் ஆளாக்கப்பட்டபோதும்; வங்க தேசத் தந்தை யனும் முஜ்பீர் ரகுமான் மரணக்குழிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டபோதும் ஓடோடிச் சன்று கைகொடுத்து புதிய வங்கதேசம் ஏற்படுவதற்கே இந்தியா துணைநின்றது வங்கதேசத்திலிருந்து அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை இந்தியா மிகக் கவனமாக அணுகி, காழ்ப்பு உணர்ச்சிகள் தோன்றிடாத வாறு செயல்பட்டிருக்கிறது. எ போதிலும் அண்டை இதனை மையமாகக் கொண்டுதான், கூட்டறிக்கையில், துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் உள்ள நாடுகளுக்கிடையே நம்பிக்கையையும் நல்லுறவையும் வளர்க்கும் விதத்தில் அண்மையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கிறது" என்ற வாசகம் அமைக் கப்பட்டுள்ளது. சீனா இவைகளே அன்னியில், சீன நாட்டுடன் அரும்பிடும் உறவுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்தியா ஈ - சீ இருநாடுகளும் தூதுவர்களை ஏற்றுக்கொள்வது என்ற முடிவும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. உடன்பிறப்பே, நமதுகழகத்தைப் பொறுத்த வரையில் இந்தியப்பேரரசின் வெளிநாட்டுக் கொள்கைகளைத் தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது என்பதற்கு எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/94&oldid=1695319" இலிருந்து மீள்விக்கப்பட்டது