பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 85 ணற்ற சான்றுகள் உண்டு. உலகப்பிரச்சினைகள் பற்றித் தீர்க்கமாக சிந்தித்து. விவாதித்து, வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கை, சர்வதேச உறவுகளை வளர்ப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதில்லை என்று எல்லா நாடு களும் கூடி ஒரு உலக உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பது உணர்ச்சி பூர்வமாக வரவேற்கக் கூடிய ஒன்றாகும். வன்முறை எந்த வடிவிலும் எந்த நாட்டுக்காரர்களாலும் விளைதல் கூடாது! அது தடுக்கப்பட்டாகவேண்டும்! இந்த நல்ல எண்ணத்தின் சாயல், கூட்டறிக்கையில் காணப்படுவது - அறிக்கை- வாசகம் - என் ற அளவோடு நிற்காமல் உலகில் உள்ள எல்லா நாடுகளாலும் இதயமார ஏற்றுக் கொள்ளப் படுமே யானால், அழிவுப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் பெரும்பகுதி நேரம் மிச்சப்படுத்தப்பெற்று ஆக்கப்பணிகளுக்காக செல விடப்பட்ட வழிபிறக்கும். COFLECTED - உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள ஆசியா கண்டத்தில் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் நிலையான தன்மையும் அமைதியும் வலுவடைவதற்குப் பொதுவான முயற்சிகள் வேண்டுமெனவும், மனித சக்தியையும் வளங் களையும் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலே பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றை மேம்பாடு அடையச் செய்யவேண்டுமெனவும் கூட்டறிக்கை குறிப் பிட்டிருப்பது மன ஆறுதலைத் தரும் செய்தி மட்டுமல்ல; பகை உணர்வற்ற அமைதியிலேதான் மனித த வாழ்வு செழிக்கும் என்று அறுதியிட்டுத் தரப்படுகிற விளக்கமு மாகும். இந்துமாக்கடலில் அந்நிய ராணுவ தளங்கள் அமை வதையோ, போர்க் கப்பல்கள் நடமாடுவதையோ இந்தியா என்றுமே ஒப்புக்கொண்டதில்லை. இந்தியாவின் இந்த நிலையை வரவேற்று நமது கழகப் பொதுக் குழுக்களிலும். க-7A-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/95&oldid=1695320" இலிருந்து மீள்விக்கப்பட்டது