பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

861 கலைஞர் மாநாடுகளிலும் நாம் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக் கிறோம். வெளிவந்துள்ள கூட்டறிக்கை அதனை மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டியதோடு அமையாமல், இந்து மாக்கடல் பகுதியை அமைதி மண்டலமாக்குவதற்கு ஏற்ப தொடர்புடைய எல்லா நாடுகளுடனும் பேச்சு நடத்த இந்திய நாடும் சோவியத் நாடும் தயாராக இருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது. அந்தப் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கும் இந்த இரு நாடுகளுமே முன்னோடியாக இருக்கக்கூடும்-அல்லது இருக்கவேண்டும் என்று அனைவ எதிர்பார்ப்பது இயல்பேயாகும். ரும் உற்பத்தியில் ஒத்துழைக்கவும், விஞ்ஞானத்தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒத்துழைக்கவும் சோவியத் ரஷ்யா தொடர்ந்து அக்கறை காட்டும் என்பது கூட்டறிக்கையில் மகிழ்வூட்டக் கூடிய மற்றொரு அம்சமாகும். - பொதுவாகப் பிரதமரின் ரஷ்யப் பயணம் உலகப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முயற்சிகள் மேற்கொள்ளவும். குறிப்பாக இந்திய - சோவியத் உறவு வலுப்பெறவும், அதே சமயத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நடுநிலைமைத் தன்மையை உறுதிப்படுத்தவும் யின் மெத்தவும் பயன்பட்டிருக்கிறது. பொதுவுடைமைக் கொள்கைகளை நமது மண்ணில் பயிரிடுகிற முறையிலே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கொள்கையிலே அழுத்தமான நம்பிக்கையுடைய வர்கள் நாம்! சோவியத் நாட்டின் அரசியல் அமைப்பு முறைகள் சில நமக்கு ஒத்துவராமல் இருக்கலாம்; ஆனால் ஆதிக்கக் காரர்களின் வசமிருந்து அந்த மண்ணை மீட்டுத் தொழி பூமியாக ஆக்கிய மாவீரன் லெனினை; தேற்றோ இன்றோ அல்ல- நெடு நாட்களாகப் புரட்சித் தலைவன் எனப் போற்றி வருபவர்கள் நாம்! லாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/96&oldid=1695321" இலிருந்து மீள்விக்கப்பட்டது