பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 87 அத்தகு பாட்டாளிகளின் பாசறைக்குச் சென்றுவரும் நமது இந்தியப்பிரதமர் அவர்களின் முற்போக்குத் திட்டங் களுக்கு நாம் ஏற்கனவே காட்டியுள்ள ஆதரவு, கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்தாகும். உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான ந்தியா, மேலும் முன்னேறவும் -விஞ்ஞான அறிவு செறிந்த கூடமாகத் திகழவும், சமதர்மப் பொழிலாக மாறவும், சமுதாய மறுமலர்ச்சியும், கலாச்சார மேம்பாடும் கண்டி டவும் வும் எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் நமது ஒத்துழைப்பு உண்டு என்பது எந்த நிலையிலும் மாற்ற மில்லாத கொள்கையாகும். இந்த அடிப்படையில் திருமதி இந்திரா காந்தி அவர் களின் ரஷ்யப் பயணத்து விளைவுகள் அமையும் என்ற நம்பிக்கையோடு தாயகம் திரும்பும் அவர்களை வரவேற் கிறோம். அன்புள்ள 8. மு. க. 14676

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/97&oldid=1695322" இலிருந்து மீள்விக்கப்பட்டது