பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரி நீரும்-நமது கடமையும்! உடன்பிறப்பே! இன்னும் தீராமல் இருக்கிற காவிரி நீர்ப் பங்கீட்டும் பிரச்சினையின் காரணமாகத் தமிழகத்து விவசாயிகள், குறிப்பாகக் காவிரி நதி தீரத்து விவசாயிகள் இந்த ஆண்டு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழாவின் போதுகூட காவிரியிலும், அதன் கிளை நதிகளிலும் நீரின்றித் தமிழ்நாட்டு மக்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசின் அதிகாரிகளும், கர்நாடக அரசு அதிகாரிகளும் கலந்து பேசி, தஞ்சைப் பயிருக்குத் தீங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்ற ஆறுதலான செய்தியைத் தந்திருக்கிறார்கள். கர்நாடகத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி மக்களின் நலன்கள் கேடுறக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகுகிற அதே நேரத்தில் ஏற்கனவே பாசன உரிமை பெற்றுள்ள பழைய ஆயக்கட்டு நிலங்கள் தரிசுகளாக மாறிவிடக் கூடாது என்பதிலும் அக்கறை காட்டியாக வேண்டும். கர்நாடகம், மைசூர் ராஜ்யம் என்ற பெயருடனும் தமிழ்நாடு, சென்னை ராஜ்யம் என்ற பெயருடனும் இருந்த அந்தக் காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக் கின்றன. சென்னை ராஜ்யம் கேரளத்தின் பகுதிகளையும்