பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கலைஞர் அதற்கான உறுதியை எனக்கு அளித்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி! தஞ்சைத் தரணியில் அவர் குரல் கேட்காத குக்கிராமம் கூடக் கிடையாது. அந்த மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமமாம் திருக்குவளையில் மிகச் சாமானிய குடும்பத்தில் பிறந்து, திருவாரூரில் பயின்று, ஈரோட்டுப் பள்ளியில் இணைந்து, காஞ்சிக் கல்லூரியில் சேர்ந்து, நடமாடும் பல்கலைக்கழகத்துத் தொடர்பும் கொண்டு, இன்று உயிரினுமினிய உன்னைப்போன்ற உடன் பிறப்புக்களை இலட்சக் கணக்கிலே பெற்றிருக்கிறேனே ; இதற்கெல்லாம் தொடக்க காலப் பயிற்சிப் பாசறையாக இருந்த தஞ்சை மாவட்டத்திலேயிருந்து கழகக் கண்மணி கள் வருகிறார்கள் என்றால்; அவர்கள் மற்ற மாவட்டத்து உடன்பிறப்புக்களைவிட என்னை மிக இளமைக் காலத்திலி ருந்து அறிந்தவர்களன்றோ! அறிந்து அறியாதவர்களைப்போல ஒதுங்கிக் கொள்ளும் உத்தமர்களும் இருக்கின்ற இந்தச் சோதனை மிகு நேரத்தில் உள்ளம் நிறைந்த பாசத்தோடு தமிழக மெங்கணுமிருந்து வருகிற உடன்பிறப்புக்களைக் காணும் போது என் கண்ணில் புத்தொளி தோன்றிடத்தான் செய்கிறது. எத்தனையோ நினைவுச் சுழல்கள் என்னை ஆட்கொள்ளு கின்றன. அன்போடு பழகியவர்கள் அச்சத்துடன் விலகு கின்றனர். அருகில் வர இயலாமல் இருந்தவர்கள் ஆறுதல் தேன் துளிகளாக நெருங்கி வந்து அன்பு மழை பொழிகின்றனர். அதிலும் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தினர் என்னை மிகச் செல்லப் பிள்ளையாக வளர்த்துவிட்ட வர்கள் அல்லவா? பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்த காலந் தொட்டு என்னைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்திய