பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் கும் முறைகளை நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ளது" அதுமட்டுமல்ல. ய ய "இந்திய நாடு பல்வேறு மொழி கலாச் சாரங்களைக் கொண்ட பல்வேறு இன மக்கள் வாழுகின்ற நாடு. பல அன்னிய நாட்டுப் படை யெடுப்புக்களாலும், உள்நாட்டுச் சண்டைகளா லும் பாதிக்கப்பட்ட நாடு. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் அவதியுற்ற நாடு. இந்த அரசியல் சரித்திரப் பின்னணிகளை நினைவிற் கொண்டு எதிர்கால இந்தியாவை உருவாக்க வலுவான வகையில் நமது அரசமைப்புச் சட்டம் நமது நாட்டு மூதறிஞர்களால் பட்டது. வகுக்கப் அந்நிய அரசின் ஆதிக்கத்தால் அல்லற்பட்ட இந்திய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கிடும் முக்கிய நோக்கம் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளது. பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை இணைத்து ஒருமைப்பாடு நிறைந்த இந்தியாவை உருவாக்கக் கூட்டாட்சித் தத்துவத் தையும் முக்கிய அடிப்படையாக நமது அரசமைப்புச் சட்டத்தில் அமைத்துள்ளார்கள். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய இந்திய நாட்டின் முதுபெரும் தலைவர்கள் ஏற்றுக் கொண்டு இடம் பெறச் செய்த இந்த முக்கிய கருத்துக்களுக்கு ஊறு நேராதவாறு சிந்தித்துச் செயல்பட வேண்டியது நமது கடமையாகும்' என்று, 127 கடமையை வலியுறுத்தி வழங்கப்பட்டுள்ள மாதவன் குழுவினரின் அறிக்கை;