பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயங்கள் சங்கமமானவை ! உடன்பிறப்பே, இன்று (19-8-76) இரவு நீலகிரி விரைவு வண்டியில் புறப்பட்டு உன்னைக் காண ஓடோடி வருகிறேன். கோவையில் தொடங்கி பொள்ளாச்சி, திருப்பூர், காங்கேயம், வெள்ளகோயில், கரூர், திருச்சி எனத் தொடர்ந்து, தஞ்சை நகரில் முடிவடையும் மூன்று நாள் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் உன் அன்றலர்ந்த செந்தாமரையெனும் முகத்தையும், கொள்கை உரம் பாய்ந்த அகத்தையும் நேரிலே கண்டிட, வாய்ப்பினைப் பெற்று வருகிறேன், வருகிறேன். அடடா! நான் வருகிறேன் என்பதிலும், என்பதிலும், உனைக் காணப்போகிறேன் என்பதிலும் எவ்வளவு தாங்க முடியாத பூரிப்பு தெரியுமா எனக்கு? ஒன்றா? இரண்டா? ஏறத்தாழ இருநூறு நாட்கள்! அவை நாட்களாக அல்ல; கொடுந்தணலாக மாறியன்றோ என் இதயத்தை சுட்டெடுக்கின்றது. நாள்தோறும் உன்னைப் போன்ற உயிரனைய உடன் பிறப்புக்கள், தங்கள் இதயத்தின் துடிப்புகளை எழுத்துக் களாக மாற்றி எனக்கு வரையும் மடல்கள் எண்ணற்றவை. அவையனைத்தையும் வெளியிட இடமின்மையால் மன்னை உடன்பிறப்பின் கடிதமும், மணக்கும் தமிழ் எடுத்துக் கர்நாடகத்து உடன்பிறப்பு எழுதிய கடிதமும் ஏட்டில் இடம்பெற்றன.