பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் பிறப்பே, இந்த இளநகை! இருபத்தேழு ஆண்டுகள் நிரம்பிய இளஞ்சிங்கமாக நமது கழகம் பீடு நடை போடுகிறது. வரும் செப்டம்பர் பதினைந்தாம் நாள் தமிழ் தமிழ் வானின் செங்கதிரோன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை யும், பதினேழாம் நாள் நம்மை ஆளாக்கிய தன்மான இயக்கத்தின் தந்தை பிறந்தநாள் விழாவினையும், நமது கழகம் பிறந்தநாள் விழாவினையும் இணைத்து நாடெங் கணும் கொண்டாட கழக அமைப்புக்கள் தயாராகிக் கொண்டு வருகின்றன. உரிய அனுமதிகளைக் காவல் துறையினரிடம் முறையாகப் பெற்று ஒழுங்கும் அமைதி யும் ஒரு சிறிதும் கெடாத வகையில் அண்ணன் பிறந்த நாளையும், அய்யா பிறந்த நாளையும், இருவரும் வளர்த்த இலட்சிய உணர்வுகளை இடைவிடாது காத்துப் பரப்பி வரும் நமது கழகத்தின் பிறந்தநாளையும் ஆர்வத்துடன் கொண்டாடிட ஆங்காங்குள்ள செயல்திறம் படைத்த உடன்பிறப்புக்கள் பம்பரமெனச் சுழல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். கோட்டுக்குள் நின்று, வரம்பு கடந்திடாமல், நமது கொள்கைகளை விளக்கிடவும், சமுதாயத்திலும் அரசியலிலும் தலைதூக்குகின்ற வன் முறைச் சக்திகளை அடையாளம் காட்டிடவும், வாய்மை நிலைக்கவும், வன்னெஞ்சம் வீழ்ந்துபடவும், ஆக்கரீதியாக அமைதியுடனும், அசையாத உறுதியுடனும் செயல் படவும் செப்டம்பர் திங்களை நீயும், மற்ற உடன்பிறப்புக் களும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.