பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ய கலைஞங் பெரிய நாடுகளில் ஒன்றாக சீனத்தை உயர்த்திய பெரு மைக்குரியவர் என்பதையும் யாரும் மறந்திட முடி யாது. பாடு - - தீராத பிரச்சினைகள் - தினம் ஒரு கருத்து வேறு இவைகளுக்கிடையிலேயும் அனைத்தும் கட ந்து நிற்கும் மா சே துங் போன்ற தலைவர்களின் தியாக லாழ்வு-வீர வரலாறு-ஆகியவை என்றென்றும் மறை யாத உணர்ச்சிக் காவியங்களாகிவிடுகின்றன. கொள்கை. வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு; குன் குன்றென நிமிர்ந்து நிற்கும் தீரத் திருஉருவங்களைப் புகழ்வதும் போற்று - - வதும் அரசியல் பண்பாட்டுக்குரிய ஒன்றாக இருக் கும்போது, அடித்தளத்து மக்களைக் கைதூக்கிவிடவும்- தொழிலாளி வர்க்கத்திற்குத் துணைபுரியவும் - தன் னையே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய வீரமிக்கப் பொதுவாழ்வைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து இறுதியில் வெற்றியும் பெற்ற மா சே துங்கின் மறைவு நமக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாக இருப்பதில் வியப்பென்ன? நூறு மலர்கள் பூக்கட்டும் என்று சீனப் பொது வுடைமைப் பூங்காவில் கூறிய விளங்கினார். அந்த மலர் தாய்மலராக அவர் வாடி விழுந்துவிட்டது இன்று! ஆனால் அது பரப்பிய மணம் மாறாது - மறை யாது! அன்புள்ள, மு.க. 10-9-76