பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் பொய் சொன்ன குற்றத்திற்காக பூலோகத்தில் கோயிலே இல்லாமற் உமக்கு போகக் கடவது! அதேபோல் பொய் உரைத்த தாழம் பூவும் இனிமேல் என் பூஜைக்கு வரக்கூடிய தகு தியை இழக்கிறது" ம்! 191 இந்தச் சாபத்தினால்தான் பிர்மாவுக்குக் கோயிலே இல்லாமற் போய்விட்டது என்பது புராணம்! அதுவும் திருவண்ணாமலை ஸ்தல புராண பாவம், பிர்மாவுக் காகப் பொய் சொல்லப் போய்த் தாழம்பூவும் சாபத் திற்கு ஆளானது! உடன்பிறப்பே, இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ, கதையின் மூலம் கிடைக்கிற நீதி நன்றாக இருக்கிற தல்லவா? பொய் சொன்னது கடவுள்களிலே ஒருவராக இருந்தாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடியதல்ல! நம்பக்கூடியதுமல்ல! கண்ணாரக் கண்டதும் பொய் காதாரக் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதற்கு ஏற்ப, சிவனார் எடுத்த சிவனார் எடுத்த நடவடிக்கையால் பிர்மா, கோயிலிழந்தார். தாழம்பூ பூஜைக்குரிய தகுதியை இழந்தது! - பொய் எனவே கோயிலிழந்த பிர்மாவின் கதையைச் சொல்லி, எதிர்காலக் குழந்தைச் செல்வங்களை பேசாத உண்மையின் வடிவங்களாக வேண்டும். உருவாக்க அதற்கு இந்தக் கதை பயன்படும். படைப்புத் தொழில் குறைவாக நடைபெற வேண்டுமென்றுதான் அப்போதே பரமசிவன் பிர்மாவுக்கு கோயில் இல்லாமல் செய்துவிட்டார்; அதை உணர்ந்து அனைவரும் குடும்ப நலத் திட்டத்தை தீவிரமாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் கவர்ச்சிகரமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அன்புள்ள க.மு. 25-9-76