பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பற்றவரை இழந்தோம் ! உடன்பிறப்பே, ! . திரா 'எனது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சி தரத்தக்க ஒரு நிகழ்ச்சியை இப்போது நடத்தி வைக்கிறேன். விட முன்னேற்றக் கழகத்தின் தலைவரை நான் நாற்பது ஆண்டுகளாக அறிவேன். பல நேரங்களில் அவரது ஏற்றம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். வேறு சில நேரங்களில் அவ ரது துன்பம் கண்டு நான் மன வேதனையும் கொண்ட துண்டு. அவரது பாதை கடுமையானதாக இருந்தது. சோதனை மிக்க நாட்களை அவர் கடந்து வந்துள்ளார். எல்லாவற்றையும் விட்டுத் தனிமையில் ஒதுங்கிடக்கூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் தனது விடா முயற்சியின் காரணமாக இன்றைய உயர்நிலையை அவர் அடைந்துள் ளார். ஆபிரகாம் லிங்கன் மரக்குடிலில் இருந்து வெள்ளை மாளிகைக்கு வந்தது போல அவர் வாழ்க்கையும் அமைந் துள்ளது. தமிழ்ப் பேச்சாற்றலில் அவர் எல்லோரையும் மீறியவர். ஆங்கிலத்திலும் அவருக்கிணையானவர் இல்லை. நாநலம் வாய்ந்த பேச்சாளர் அவர். அவரது சொற் பொழிவில் கருத்துக்கள் குவிந்திருக்கும். இதுவே ஒருவரை மற்ற மனிதர்க்கெல்லாம் தலைவராக்குகிறது. அவர் இந்தி யத் தலைவராக வேண்டும். அவரே எனக்கும் தலைவர்." 1968-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் நாளன்று சென்னை மாநகரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை யைத் திறந்து வைத்து உரையாற்றிய போது டாக்டர் ஏ.ஆர். முதலியார் அவர்கள் அண்ணாவுக்குச் சூட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/42&oldid=1695449" இலிருந்து மீள்விக்கப்பட்டது