பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ஒலிம்பிக் -- ஒளிச்சுடர்!” உடன்பிறப்பே, பிரச்சினைகளுக்கிடையே கவனத்தை ஈர்த்துக் பல்வேறு குழப்பமான சிக்கித் தவித்து, உலகத்தின் கொண்டிருந்த மாண்ட்ரீல் நகர ஒலிம்பிக் போட்டிகள் பிரிட்டிஷ் அரசி எலிசபெத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தைவான்; தன்னை சீனக் குடியரசு என ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தி, அதற்குக் கனடா இணங்காத காரணத்தால் கனடாவில் நடைபெறும் 21-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தைவான் வீரர்கள் கலந்துகொள்வதில்லையென்று திரும்பிப் போய் விட்டனர். கம்யூனிஸ்டு சீனா என ஒரு பெரிய நாடு இருக்கும் போது, காலஞ்சென்ற சியாங்கேஷேக்கிற்கு மிச்சப்பட்ட பார்மோசாவை சீன அரசு என அழைக்கவேண்டும். என்ற பிரச்சினை நீண்ட நாட்களாகவே இருந்து வரு கிறது. அந்தப் பிரச்சினை இப்போது ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டியிலும் தலைகாட்டி, இறுதியாக அந்த. வீரர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற செய்தியோடு முடிவடைந்திருக்கிறது. மற்றும் நான்கு அரபு நாடு களும், பதினேழு ஆப்பிரிக்க நாடுகளும் ஒலிம்பிக் அணி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே நூற்றிப் பதினாறு நாடுகள் பங்கேற்கவேண்டிய ஒலிம்பிக் பந்தய விளையாட்டுக்களில் தொண்ணூற்றி நான்கு நாடுகள் மட்டுமே கலந்துகொள்கின்றன. ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/47&oldid=1695455" இலிருந்து மீள்விக்கப்பட்டது