பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 39 குழு அமைப்புச் செய்தி மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்க முடியாது. காந்தியடிகள், மற்ற தீமைகளை ஒழிக்க வேண்டும். என்பதைப் போலவே குதிரைப்பந்தய ஒழிப்பிலும் மிகத் தீவிரங்காட்டினார் என்பதை காந்தியடிகளிடம் நெருங் கிப்பழகி, அவரது உள்ளத்தை உணர்ந்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள். அண்ணா அவர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட தி. மு.க. தேர்தல் அறிக்கையிலேயே குதிரைப் பந்தய ஒழிப்பு இடம் பெற்றிருக்கிறது. உஉ 1949ஆம் ஆண்டிலேயே Madras City Police and|Gam- bling (Amendment) Act என்ற சட்டம் கொண்டு வரப் பட்டு குதிரைப் பந்தய ஒழிப்புக்கு வழி வகுக்கப்பட்டது என்றாலும் கூட அந்த சட்டம் நடை முறைக்கு வருவதை இருபத்தைந்து ஆண்டுகாலமாக ஓராண்டு, ஈராண்டு என ஒத்திவைத்து குதிரைப்பந்தயம் நடப்பதற்கு இடை யூறு இல்லாமல் செய்யப்பட்டது. அறி குதி கழக அரசு1949 ஆம் ஆண்டு சட்டத்திற்கு உயிர் கொடுத்து, குதிரைப் பந்தயம் ஒழிக்கப்பட்டதாக வித்தது. இருநூறு ஆண்டு காலமாக நடைபெற்ற ரைப் பந்தயத்தை நிறுத்தியதற்கு அடையாளமாக நினை வுச் சிலைகளும் அண்ணா மேம்பாலத்திற்கு இரு புறங்களி லும் நிறுவப்பட்டன. குதிரைப் பந்தய சங்கத்தினர் ஆறுமாத காலம் மட் டும் அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட தின் பேரிலும் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் நடை பெற்று விட்டன என்று காரணம் காட்டப்பட்டதாலும் சட்டப் பேரவையிலும் எதிர்க்கட்சியினர் சற்று அவ காசம் வழங்கலாம் என்று வலியுறுத்தியதாலும் று ஆறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/53&oldid=1695461" இலிருந்து மீள்விக்கப்பட்டது