பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுதான் தனிச்சிறப்பு! உடன்பிறப்பே. இன்று இலக்கியம் பற்றி ஒரு கடிதம். புறநானூற் றின் பக்கம் சென்று வருவோம். வீர காதைகளையும் மானமறவர்களின் வரலாறுகளை யும் வீராங்கனைகளின் பெருமைமிகு வாழ்க்கைக் குறிப்புக் களையும் வாரி வழங்குகின்ற புறப்பாடல்களில் புலவர்கள் எடுத்தாளுகின்ற உவமைகளை எண்ணி எண்ணி மகிழ லாம். சேரலிரும்பொறைக்கும் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழிய பாண்டியனுக்கும் நடந்த போரில் தோல்வியுற்ற இரும்பொறை சிறையிலிருந்து மீண்டு வலிமையைப் பெறுகிறான். அவன் அப்படி வலிமை பெற் றது எப்படியிருந்தது என்பதை அழகிய உவமை வாயி லாக விளக்குகிறார் புலவர் குறுங்கோழியூர்க் கிழார்! 6 “நீடு குழி யகப்பட்ட பீடுடைய வெறுழ் முன்பிற் கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று கிளை புகலத் தலைக் கூடியாங்கு..." பெருமையும் வலிமையும் கொண்ட முதிர்ந்த தந்தங் களைப் படைத்த யானையாகும் அது! அது வரும் வழியிலே குழியொன்றில் விழுந்து விடுகிறது. அது குழியில் விழுந்து விட்டதைக் கண்ட மற்ற யானைகள் திகைத்து நிற் கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/61&oldid=1695469" இலிருந்து மீள்விக்கப்பட்டது