பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞர் அந்தத் திகைப்பை மாற்றி, தன் இனத்தினர் மகிழ குழி யில் விழுந்த யானை வெளிக்கிளம்புகிறது! எப்படி? தன்னு டைய முதிர்ந்த வலிமை பொருந்திய தந்தங்களால் குழி. யின் நாற்புறத்தையும் குத்திக் குத்தி மண்ணைத் தூர்த்து குழியின் ஆழத்தைக் குறைத்து விடுகிறது. 'கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று" என்கிறார் புலவர். அதாவது அந்தப் படுகுழியின் நிலை சரியுமாறு தனது கொம்புகளால் குத்தித் தூர்த்து விடுகிற தாம். தூர்க்கப்பட்ட குழியிலிருந்து வெளிக்கிளம்பிய யானை, "கிளை புகல்"="தன் இனம் விரும்ப 6 = "தலைக்கூடியாங்கு" = "தன் இனத்தோடு சேர்ந்து விட்டதைப் போல' என்று சேரலிரும்பொறையும் தன் நாடு சேர்ந்து விடுகிறான் கூறுகிறார் புலவர். தன் கவனக் குறைவாலும் அலட்சியத்தாலும் மாயக்குழியில் விழுந்துவிட்டாலும் கூட, யானை குழியிலிருந்து. வெளியேறுகிற காட்சியை இரும்பொறை மன்னன், மீண்டும் தன்னுடைய நாடு சேர்ந்தமைக்கு ஒப்பிடும் சிறப்பு போற்றுதற்குரிய தன்றோ? உடன்பிறப்பே, காதலையும், களக் காட்சிகளையும், காட்டுவளம் மலை வளம் போன்ற கவின்மிகு இயற்கை வனப்புகளையும், செழிப்புநிறை தமிழ் எடுத்துப் பாடியிருக்கிறார்கள் செந் தமிழ்ப் புலவர் பெருமக்கள், அதுதான் தமிழ் இலக் கியத்தின் தனிச்சிறப்பு! அன்புள்ள, மு.க. Dக 23-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/62&oldid=1695470" இலிருந்து மீள்விக்கப்பட்டது