பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பவில்லை நாட்கள் ஓடின... 91 உயர் நீதி மன்றத்தில் ‘அப்பீல்' வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. முத்துவின் கனவுகள் அவனுக்குப் புதிய பரபரப்பைத் தந்தன. அன்றொரு நாள் நாள் போலீசாரால் கைது செய்யப்பட்டபொழுது அவன் கண்ட இன்பக் கனவை மீண்டும் கண்டவாறு சிறைச்சாலையில் ஒரு மேடையில் தூங்கிக்கொண் டிருந்தான். அழகி பொன்னுவுடன் முதல் இரவைச் சுவைக்கும் கட்டம். இருவரும் சப் ஜெயிலில் சந்தித்ததை-விழிகளால் பேசியதைத்—திருமண முடிவைத் தங்கள் மனத்திற்குள் செய்ததை-ஒருவருக்கொருவர் பேசி மகிழ்கின் றனர். 68 உன் விரல்களை நினைத்துக் கொண்டு சிறைக் கம்பிகளைத் தடவிக்கொண்டே யிருந்தேன் " என்கிறான் முத்து! 66 அவ்வளவு முரட்டு விரலா எனக்கு ?” எனக் கேட்டுச் சிரிக்கிறாள் பொன்னு! கேலியால் வெல்லப்பட்ட முத்து அவள் உதடுகளைத் தன் உதடுகளால் மூடுகிறான். உணருகிறான். கனவுதானே ! விழித்துக்கொள்கிறான். இன்னும் சிறையிலே தானிருக்கிறோம்-என்பதை அப்பீல் என்ன ஆகுமோ என்று எண்ணுகிறான். எதிரே சிறை அதிகாரி வருகிறார்; வார்டர்களும் வருகிறார்கள். 66 ! “வா முத்து!" என அழைக்கிறார் அதிகாரி ! அவர்களோடு அவன் போகிறான். அதிகாரியின் முகக் குறிப்பிலேயிருந்து அவன் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரசம் பூசப்படாத கண்ணாடிபோல சில அதிகாரிகளின் முகங்கள் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட முகமே அந்த அதிகாரிக்கு! தனக்கு அப்பீலில் வெற்றி கிடைத்திருக்குமா என்ற ஆவல் அவனை ஆட்டிப் படைக்கிறது. அதிகாரி, தூக்குமேடைக் கைதிகளை அடைத்துப் போடும் கொட்டடிக்குள் நுழைகிறார். கூண்டு திறக்கப்படுகிறது. முத்து உள்ளே தள்ளப்படுகிறான். கூண்டு பூட்டப்படுகிறது, முத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை. விழிக்கிறான். 66 அய்யா! அய்யா ! என்ன இது?" என்று கத்துகிறான். “அப்பீல் செய்துகொண்டாயே; அதில் ஏற்பட்ட முடிவு இது ! ’