பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்யகோடி 66 ஆதரிக்கிறார் என்பது அவருக்குப் பெயர். அவர் ஈடுபடாத பொதுப் பணிகளே கிடையாது. அகில உலகப் புகழ் பெறாவிட் டாலும், அனைத்திந்தியப் பெயர் கிடைக்காவிட்டாலும், தமிழக மெங்கணும் அவரை அறிவார்கள் என்ற நிலை பிறக்காவிட்டா லும், அவரது சொந்த நகரத்திலே அவரைச் சுற்றிப் பலர் சூழ்ந்த படி இருப்பார்கள். நகரசுத்தித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்ற ஒரு செய்தி கிளம்பும். செய்திக்கு முன்பாக இவர் கிளம்பு வார் ; நகரசுத்தியாளர்களே! தயாராகுங்கள். ரத்தம் சிந்து வோம். எத்தர்களை விரட்டுவோம் என்று முரசு கொட்டுவார். அந்தத் தொழிலாளர்களின் தலைவர்களால்கூட அப்படி கர்ச்சனை செய்ய முடியாது; இவர் அவ்வளவு பிரமாதமாகச் சங்கநாதம் செய்வார். அந்தக் கிளர்ச்சி அடியோடு செத்துச் சுடுகாடு போகிற வரையிலே தூங்கமாட்டார். தோல்விக்கு இவரே பல காரணங் களை எடுத்துச் சொல்லிவிட்டு, அடுத்த போராட்டம் என்ன துவக்கலாம் என்று மூக்கில் விரல்வைத்துக்கொண்டு யோசிப்பார். நகரசுத்தியாளருக்கு அதுவரையிலே கிடைத்துவந்த சலுகைகள் சிலவும் புண்யகோடியின் பிரவேசத்தால் குறைந்துபோகும். அப்படிக் குறைந்தால்தான் ஆத்திர உணர்ச்சி அதிகமாகப் பெருக்கெடுக்கும் என்று புது விளக்கம் தந்துவிட்டுப் பொதுக் கூட்டத்திலே விழுகிற மாலைகளிலே ரோஜா மலர்கள் இருக் கின்றனவா ; இருந்தால் எத்தனை நாளைக்குக் காப்பி போடலாம் என்று கணக்குப் போடுவார்.