பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கலைஞர் கருணாநி தியின் சிறுகதைகள் அவன் பெருமையை மக்கள் தயங்குவர்-பெயரைக்கூறுவது இழிவு படுத்துமோ என்ற சந்தேகத்தால் ! ஆகவே அவனை மேதை என்றே அழைத்தது இந்த மேதினி. 66 " சில புலவர்கள்கூட அழகாகச் சொல்லுவார்கள் அவனது பெயரைப் பற்றி. 'மே" என்பது உலகத் தொழிலாளரின் உற்சவதினம்; தை என்பது தமிழரின் உழைப்பு வெற்றி தினம் ; ஆகவே இரண் பெருந் திருநாட்களும் சேர்ந் தமைந்த பொருத்தமான பட்டம் ‘மேதை' என்று! நமது சிந்தை கவர்ந்தவனுக்குச் சிறப்பான பெயர் அமைந்துவிட்டது என்று கூறி மகிழ்வர் பல்லோர். வயதோ முப்பது நிறையவில்லை ; வாலிபத் தென்றல்! அதற்குள்ளாக அவனுக்கு வந்து குவிந்த புகழோ பெருங்குன்றம் ! அவனைச் சுற்றி வாழ்த்துப் பாடியபடி எந்நேரமும் இருப்பர் மாணவரும், தொழிலாளரும், பண்டிதரும், பாமரரும்! தனக்கு எத்துணைப் பெருமை வளர்ந்திருக்கிறது என எண்ணும்போது, மணக்கும் அவன் நெஞ்சம். நெஞ்சம். புகழ் கண்டு புகழ் கண்டு பூரிப்படைவான். ஆனாலும் அவன் உள்ளம் புகையும் எரிமலை போல இருந்ததை அவனால் மறைக்க முடியவில்லை. மறைப்பதற்கு மிகவும் கஷ்டப் பட்டான். மாலை புகழ்! புகழ்!! புகழ்!!! - யாருக்கு வேண்டும் இந்தப் புகழ்? சரித்திர விற்பன்னன் ஜகம் புகழும் பூகோள மேதை-கணித நிபுணன் -கவிஞருக்கு மன்னன்-எழுத்து வேந்தன் என்றெல்லாம் உலகம் உளறுகிறது அவனைப் பற்றி! ஆனால், அவனோ துடித்துக் கிடக்கிறான். தொலையாதோ இந்தப் புகழ்" என்று மனம் மனம் வெடித்துச் சாகிறான். காரணம் அவனால் தனியே எங்கும் போகமுடியாது. நேரத்தில் கடற்கரையில் உலவி வரலாமா? முடியாது. கூடாது என்று தடையல்ல; அவன் போக முடியாதபடி புகழ் அவனைத் தடுத்தது. நூறு, ஆயிரம் என்று மக்கள் சூழ்ந்து கொள்வர். மேதை வந்துவிட்டார் என்ற செய்தி எங்கும் பரவும். தனிமையை நாடி வந்த அவன் புகழ்தரும் தலைவலி தாங்காமல் ஓட்டமாக ஓடி வீட்டுக்குப் போய்விடுவான். ரயிலில் போகமுடியாது. கடைத் தெருப் பக்கம் தலைகாட்ட இயலாது. கண் காட்சி சாலைகளில் காலடிவைக்க முடியாது. புகழ்-புகழ்-புகழ்- எங்கும் புகழ் ! அந்த மேதையின் நற்பண்புகள் பற்றிப் பேசாதார் இல்லை. 66 99