பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்நூறு ரூபாய் 105 என்று அவனைக் கேட்டான். பையன் சந்தோஷமாய்த் தலையாட்டி னான். அவனைத் தன்னோடு கூட்டிக்கொண்டான். முதலாளி நடை தானாகவே வந்துவிட்டது. 10-30 மணிக்கு ஈரோட்டில் வண்டி. ஒன்றரை டிக்கெட் எடுத்துக்கொண்டு இருவருமே ரயில் ஏறினார்கள். அந்த ஏழைச் சிறுவனுக்கு ஒரே மகிழ்ச்சி. லக்ஷ்மி நாராயணன் பிளேயர்ஸ் சிகரெட்டைப் புகைத்தவாறு கம்பீரமாக ரெயிலில் உட்கார்ந்திருந்தான். வண்டியும் திருச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. குதூகலமாய் லக்ஷ்மிநாராயணன் வெற்றிலை பாக்குக்கடை துவக்க விழா, நடைபெற்றது. முதலாளி ஸ்தானத்தில் லக்ஷ்மி நாராயணன். வேலைக்காரனாய்-ஓடும்பிள்ளையாய் அந்தப் பொடிப் பயல். என்ன சுறுசுறுப்பாய் வேலை செய்கிறான் தெரியுமா? வெற்றிலைப் பாக்குக்கடையும் வியாபாரச் செழிப்பில் வளர்ந்தது. திருச்சியில் இந்தக் கடைக்குத்தான் அபார மதிப்பு, லக்ஷ்மிநாராயணன் கண்ணை விழித்துப் பார்த்தான். திருச்சி ஜங்ஷனில் வண்டி நின்றது-மணி நான்கு. பக்கத்திலிருந்த பயலைப் பார்த்தான்-காணவில்லை. பையைப் பார்த்தான் ; பண மில்லை. ஒரு பெருமூச்சு- தங்கப்பன் எதிரே வந்து நின்று சிரிப்பது போலிருந்தது. நல்லவேளை வெளியே செல்ல டிக்கட்டா வது இருந்தது! து