பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை வழக்கம்போல் பானுவின் தள்ளு வண்டி 'பார்க்' நோக்கிப் புறப்பட்டது. பானுவின் சின்னஞ் சிறு வாயிலிருந்து சிதறிக் கொண்டேயிருக்கும் மழலை மொழிகட்குப் பதில் பேசியவாறு வண்டியைத் தள்ளிக்கொண்டு போனாள் பார்வதி. பானுவுக்கு வயது ஆறு கூட ஆகவில்லை. வீட்டில் ‘துரு துரு' என்று சும்மா யிருப்பதில்லை. முக்கியமாக அப்பா அம்மாவைப் பேச விடுவ தில்லை யென்றால் பாருங்களேன்! காலையிலிருந்து கிராமக் கணக்கு வழக்கு, குத்தகைதார் பணம் பட்டுவாடா, கிசான் தொல்லை, வியாபாரப் பிரச்சனை இவ்வளவையும் கவனித்துவிட்டு, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நல்லக்கண்ணுப் பிள்ளைக்கு ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் ஒரு விநாடிகூட வீணாகப் போய்விடக் கூடாது என்பது பிள்ளையின் நோக்கம். ஆறு மணி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருக்கும் கருணாம்பாள்-ஆமாம் அவரது மனைவி- அந்த அம்மையாரும் அந்த ஓயா உல்லாசத் தைத்தான் விரும்பினார்கள். அவர்களின் இனிய பொழுதை- அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை தொடர்ச்சி கெடும்படி நடு நடுவே அறுத்துவிடும். என்னதான் புத்திர பாசமிருந்தாலும் சற்று நேரம் யாருடைய தொந்தரவுமின்றி இருக்கத்தான் கருணாம்பாளின் மனம் விரும்பியது. அதுவுமென்ன ; அந்தத் தம்பதிகள் ஏழைகளா-இன்பம் என்ன நிறம் என்று கேட்க ? குடிசை மன்னர்களுக்கும் ராணிகளுக்கும்தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிடங்கள் கூட ஒதுக்க