பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி $ 3 காதலனும் காதலியும் கொஞ்சிடும் அந்த அழகான நந்தவனத்தைப் பற்றி உணர்ச்சி பொங்கிட வர்ணித்திருக்கிறானே ; அந்த ஒய்யார வனத்திலே உல்லாச கீதம் பாடும் ஜீவஜோடிகளை யாரும் சித்திரிக்காத வண்ணம் சித்திரித்து எழுதி இருக்கிறானே ; படிக்கும் போதே நமக்கு ஒரு போதை தோன்றுகிறதே; அதை எழுதும்போது அவன் நிலை எப்படி இருந்திருக்கும்!-இப்படி யெல்லாம் எழுதுவது போன்ற கற்பனையை வாழ்நாளில் தத்ரூப மாகச் சந்திக்க வேண்டுமென்று அவன் விரும்பமாட்டானா? அந்த இன்ப விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித் திருக்க மாட்டானா? அந்தத் தவிப்பின்போது ரோஜா கிடைக்கா விட்டால் ஒரு கனகாம்பரம் என்ற அளவுக்குத் தன் ஆசையை விரித்திருக்க மாட்டானா?' என்றெல்லாம் அவனைப்பற்றிப் பேசினர். (6 ஆச்சரியம்தான் ! நீ நினைக்கிறபடியோ, சந்தேகங் கொள்ளு கிறபடியோ, அந்த மேதை, வழுக்கி விழுந்து விடுகிறவனல்லன்! நிச்சயம் அத்தகைய வழியில் அவன் இறங்கமாட்டான் ! ” என்று உறுதியோடும் பலர் பதிலுரைத்தனர். 86 நல்லொழுக்க சீலன் என எப்படி நவில முடியும்? நாடு பல சுற்றியிருக்கிறான்?” 66 ரடு பல கற்றிருக்கிறான்-ஏன் அவன் சற்குணனாய் இருக்க முடியாது?" இப்படிக் கேள்வியும் பதிலும் மாறி மாறி! 66 'தான் எதிர்பார்த்து நடைபோடும், அந்த இலட்சியம் கைகூடும் வரையில்-உலகத்திற்கு அந்த ஒப்பற்ற பரிசை வழங்கும் வரையில்-அவன் திருமணமே செய்துகொள்ள மாட்டானாம்!' இந்தப் பிரச்சாரமும் பரவியது. அவன் அப்படிச் சொன் னானோ இல்லையோ-எல்லோரும் அப்படித்தான் நம்பிக்கொண் டிருந்தனர். அவன் சொல்லாததை யெல்லாம் மக்கள் சொல்லுவர். அதைப் பற்றிப் புகழ்வர் ; அவனும் வேறு வழியின்றி, 'ஆமாம், சொன்னேன்" என்று ஒத்துக்கொள்வான். 66 . “இலட்சியம் கைகூடும் வரையில் உறங்கவும் மாட்டாராம்!” இப்படிப் பிரச்சாரம் நடைபெறும். அன்பின் மிகுதியால் கிளம்பும் வதந்தி. அவனைப் போய்க் கேட்பர், “உங்கள் உங்கள் இலட்சியம்