பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஆகா, கைகூடும் வரையில் உறங்கமாட்டீர்களாமே! உறுதி ! என்ன உறுதி எனப் புகழ் பாடியபடியே! 66 66 99 என்ன இல்லை, இல்லை-எனக்கு அப்படியெல்லாம் இலட்சியத்தில் மோகமில்லை!” என்றா அவனால் சொல்லமுடியும்? முடியாது. ஆகவே, ஆமாம் உறங்கமாட்டேன்” என்பான், அதற்காகத் தன்னைச் சுற்றியிருப்போர் தூங்கிய பிறகு நாற்காலியில் சிந்திப்பதுபோலத் உட்கார்ந்தபடியே- எதையோ தூங்கிக் கொண்டிருப்பான். பாவம்! அதுவும் அதுவும் அமைதியற்ற அரைத் தூக்கம். - “ நமது மேதை-நல்ல வேட்டி சட்டைகூட உடுத்துவதில்லை அவருடைய எண்ணமெல்லாம் உலகத்திற்கு ஒரு புதிய வழி காண வேண்டுமென்பதிலேயே லயித்துக்கிடக்கிறது” என்பர் சிலர். 66 'இல்லை, இல்லை-நான் ஆடம்பரமாக உடை உடுத்துவேன்” என்றா அவன் கூறமுடியும் ? முடியாதே; பாவம்! அதற்காக உடுத்து நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு அழுக்கு ஆடைகளை வான். 66 பெரிய மகானுக்கும் நமது மேதைக்கும் என்ன வேறுபாடு ? பார்ப்பதில்லையே ஒன்றுமில்லை -பெண் என்றால் திரும்பியும் இவர் !” என்று அதிசயமாகப் பேசுவர் பலர். 66 உம்-பெண்ணாவது மண்ணாவது!” என்று மேதையும் அவர்களோடு சேர்ந்து பேசுவான். பேசத்தானே வேண்டும் அவனுடைய பெருமையைக் காப்பாற்றிக்கொள்ள ! மேதை ஒருநாள் வெளியூருக்கு அழைக்கப்பட்டிருந்தான்- கல்லூரி ஒன்றிலே விஞ்ஞான அறிவு' என்ற தலைப்பிலே சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக! கல்லூரித் தலைவரின் வீட்டிலேயே தங்கியிருந்தான். யாரும் தொந்தரவு கொடுக்காம லிருப்பதற்காகத் தனியாக மேல் மாடியில் மேதைக்கு இடவசதி செய்து கொடுத்திருந்தார் கல்லூரித் தலைவர். கல்லூரியில் மேதையின் சொற்பொழிவு நடைபெற்றது. விஞ்ஞானத்தின் பெருமைகளை அவனுக்கே உரிய அழகு நடையில் அவனால் மட்டுமே விளக்கமுடியும் என்ற அத்தனைப் பெரிய கருத்துக்களை மாணவரிடையே வாரியிறைத்தான் மேதை.