பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 5 கூட்டத்திலே மாணவிகளும் அதிகமிருந்தனர். அந்த முல்லைக் கொல்லையின் நடுவே அழகு ரோஜா ஒன்றும் இருந்தது. மேதையின் பேச்சையும், அவனது கட்டுக் குலையா மேனியின் அழகையும் அந்த ரோஜாப்பூ தன்னிரு செவிகளாலும், விழி களாலும் முறையே விழுங்கிக்கொண்டிருந்தது. மேதையின் பார்வையும் இரண்டொரு முறை அந்த அழகியின் மீது பாய்ந்தது. ஆனால் பாய்ந்த வேகத்தில் மீண்டது. அவன் அவளை லட்சியம் செய்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. சொற்பொழிவு முடிவுற்றது. மேதையை மாணவர் சூழ்ந்துகொண்டனர். அனைவரிடமும் பேசிவிட்டு மேதை கல்லூரித் தலைவரின் வீட்டுக்குப் புறப்பட்டான். உணவு முடிந்த பின்னர் அமைதியை விரும்பி, மேதை மாடிக்குப் போனான். மாடியில் உலவிக்கொண்டிருந்தான். நல்ல நிலவு! உலவிக்கொண்டிருந்தவனுக்குக் கால் வலி எடுக்கவே நாற்காலியில் அமர்ந்தான். மேதையைக் கவனிப்பதற்காக அமர்த் தப்பட்டிருந்த பையன் ஓடிவந்து, மேதையின் கால்களை அமுக்கி விட்டான். மேதையின் வலி கண்ட கால்கள் பையனின் பணிவிடையால் சுகம் பெற்றன. மேதையின் கண்கள் கட்டவிழ்த்துக்கொண்டு இங்குமங்கும் திரிந்தன. எதிர்த்த வீட்டு மாடியிலே, கல்லூரியிலே கண்ட அந்த ரோஜா நின்றுகொண்டிருந்தாள். அவள் மேதையையே பார்த்துக்கொண்டுமிருந்தாள். அவள் கண்களிலேயிருந்து புறப் படும் அந்தக் காதற் கணைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை! ஆனால் அவைகள் மேதையை அசைக்கவும் முடியாதவை என எண்ணித் தவித்தாள் அந்த ரோஜா ! மேதைக்குக் கால் அழுத்தி விட்ட பையன் வேலை முடிந்து வெளியே போனான். போனவன் எதிர்த்த வீட்டு மாடிக்கு எப்படிப் போனானோ தெரியவில்லை, அந்த மாடியைப் பார்த்துக்கொண்டிருந்த மேதையின் கண்களிலே ஒரு காட்சி தெரிந்தது. தனக்குக் கால் பிடித்த பையன் எதிர்த்த வீட்டிலே அந்தக் கல்லூரி ரோஜாவுடன் ஏதோ பேசுகிறான். அவளும் மெதுவாக ஏதோ கூறுகிறாள். பிறகு அந்தப் பையனுடைய கைகளை எடுத்துக் கண்களிலே ஒத்திக்கொள்கிறாள். "லட்சியம் ஈடேறும் அந்தக் காட்சியை மேதை கண்டான். வரையில் பெண்களைத் திரும்பியும் பாரார்! திருமணமும்