பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலமரத்துப் புறாக்கள் 143 வல்லூறு ! அதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற புறாக்கள் அலறியடித்துக்கொண்டு காடுகளிலே புகுந்திடும். அவசரத்திலே அலைமோதிக் கிடந்திடும் சில புறாக்களை வல்லூறு வயிற்றுக்குள் தள்ளிவிட்டு ஏப்பம் விடும். அந்த ஏப்பத்திலே வந்தேன் ஏமாத்தினேன் என்ற வார்த்தைகளும் இறுமாப்போடு கலந்து வரும். இது வாடிக்கையாக அந்த ஆலமரத்திலே-ஆமாம்; புறாக்கள் ராஜ்யத்திலே நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது. " 66 இந்தக் கொடுமைபற்றிப் புறாக்கள் யோசிக்கத் தொடங்கின. நிம்மதியற்ற வாழ்வு நித்திய நிகழ்ச்சியாகிவிட்டதே ! இதற்கு நிவர்த்தியே கிடையாதா?” என ஏக்கக் குரல் எழுப்பின. ய " இதற்கொரு முடிவுகட்ட வேண்டுமென்று இரண்டு புறாக்கள் முதலில் கிளம்பின. ஒன்று கரும்புறா. மற்றொன்று வெண்புறா. வல்லூறை எதிர்த்திட இரண்டு திட்டங்கள் வகுத்தன. இரண்டு புறாக்களுக்கும் ஏற்கனவே “ கொள்வினை கொடுப்பினை விஷயத் தில் சிறிது தகராறு இருந்தபோதிலும் வல்லூறை விரட்டிடும் கொள்கையில் இரண்டும் கச்சையை வரிந்துகட்டிப் புறப்பட்டன. இது கண்டு ஆலமரத்துப் புறாக்கள் அனைத்தும் விடுதலை விருத்தம்' பாடி வெற்றி முரசொலி ” கொட்டத் தொடங்கின. ஆனந்த ஆரவாரம் செய்து கருப்புப்புறாவும், வெள்ளைப்புறாவும் இடும் கட்டளையை எதிர்பார்த்திருந்தன. . 66 " "❝ அந்தச் சமயத்தில் ஒரு நாள், ஒரு கலர்ப்புறா அவசர அவசர மாக துடித்துப் பறந்தபடி ஆலமரத்திற்கு வந்தது. அது பறந்து வந்த காரணம் ஒரு வேடன் அதைக் குறிபார்த்ததுதான். அந்த வேடன், உணவுக்காகப் புறா தேவையில்லை ; கலர்ப்புறா அழகா யிருக்கிறதே! அதைப் பிடித்துச் சென்றால் நல்ல விலைக்கு விற்க லாமே' என்ற ஆசையாலேயே அதைப் பின்தொடர்ந்தான். கலர்ப்புறா ஆலமரத்தில் நுழைந்துவிட்டதைக் கண்ட வேடன் அதை எப்படியாவது உயிரோடு பிடிக்கவேண்டுமென்று எண்ணி மரத்தடியிலே சுற்ற ஆரம்பித்தான். இதைக் கண்ட கலர்ப்புறா கலங்கிவிட்டது. ஆலமரத்துப் புறாக்களிடம் சென் று அபயங் கோரியது. அந்தப் புறாக்கள் எங்களால் வேடனை எதிர்க்க முடியாது என்று கூறின. எப்படியோ கலர்ப்புறா தன் வேதனைக் குரலை அதிகப்படுத்தி மரத்திலுள்ள சில புறாக்களைத் தன் வசப் படுத்திக்கொண்டது. இந்த நிலைமையைக் கரும்புறாவும், வெண் புறாவும் கண்டன. வல்லூறை எதிர்க்கும் வேலையோடு வேடனை விரட்டும் வேலை வேறு சேர்ந்துவிட்டதே ; இதற்குக் காரணம் ««