பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00 8 6 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் பாகத்துக்குமேல் இழந்துவிட்ட மனிதன் ; மகரிஷி! மௌத் கல்யர் என்னும் பெயருடைய மகான். 6 பெரிய' மனுஷன், 'பெரிய' ஆள், 'பெரிய ' செல்வந்தன், பெரிய' பண்ணையார் என்பதுபோலப் 'பெரிய' வியாதி என்று ஒன்றுண்டே ! அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மகான். அவர்தான் தன்னுடைய அழகான மனைவியின் தலையில் ஏறிக்கொண்டு தெருவில் போகிறார். 66 66 6 6 போடி வேகமாக!' دو போய்க்கொண்டுதானேயிருக்கிறேன், பிராணபதி!" “ நளாயினி ! நட வேகமாக! அதற்காக என்னைக் கீழே போட்டுவிடாதே ! நீ விழுந்தாலும் பரவாயில்லை !" 66 என் தெய்வமே ! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என் கூடுவிட்டு ஆவி போனாலும் கூடையைக் கீழே போடமாட் டேன். கூடையிலென்ன வியாபாரப் பொருளா இருக்கிறது? வீட்டுச்சாமானா தூக்கிச் செல்கிறேன் ? விலை மதிக்க வொண்ணா என் ரத்தினமல்லவா தாங்கள்! தங்களையா கீழே போட்டு விடுவேன்? அபச்சாரம்! அபச்சாரம்!” குஷ்டரோகக் கணவனைக் கூடையில் சுமந்து - கோமளத் தாமரையெனும் முகத்திலே சோகத்தைச் சுமந்து - அந்த நடக்கும் பொன்வண்டு நளாயினி போய்க்கொண்டிருக்கிறாள். எங்கே போகிறாள்? தீர்த்தமாடவும், க்ஷேத்ராடனம் செய்யவும் கணவன் விரும்புகிறான் ; அந்தப் பக்திப் பசியைத் தீர்த்துவைக்க வேண்டும் என்பதற்காகவா அந்த ஏந்திழையாள்-இந்த வேலையை மேற் கொண்டிருக்கிறாள்? இல்லை ! இல்லை ! பின் என்ன? பர்ண சாலையை விட்டுப் பர்ணசாலைக்கு மாறுவதற்காகவா அந்தப் பயணம் நடைபெறுகிறது—பாவையை வாகனமாகக் கொண்டு? அதுவும் இல்லை ! பின் எங்கே தான் போகிறார்கள்? தவம் புரியவு மல்ல! தலம் காணவுமல்ல! பிறகு எங்கே போகிறார் தபோதனர்? தாசிவீட்டுக்குப் போகிறார்! ஏன்? வேசித்தொழில் கூடாது! காசிநாதனைத்தொழு!' என்று போதனை புரிவதற்காகவா? அதற்காகவும் செல்லவில்லை, அந்தக் குஷ்டரோகி. பரத்தையின் வீட்டைப் பக்திக் கூடமாக்க அல்ல ! பகவான் பற்றிய விளக்க முரைக்க அல்ல! கமண்டலமேந்தியார் செல்வது கணிகையின் கட்டிலறைக்கு! முனிவரின் மோகம் முக்கண்ணனைக்காண அல்ல! நான்கு கண்களும் சந்திக்க-அந்த நயனலளிதத்தை வந்திக்க! 66