பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளாயினி 9 பொருளுக்குச் சுகம் வழங்குவாளின் அகம் நாடிப் புருஷனைக் கொண்டு செல்லும் நளாயினி- பூத்திருக்கும் ரோஜா! அந்த ரோஜா, அழுகிப்போன வண்டை கருகிப்போன ஒரு மலரிடம் எடுத்துச் செல்கிறது! அதோ, கணிகையர் தெருவும் வந்து விட்டது! நளாயினியின் உடல்வலியும் தீர்ந்தது. அவள் கணவனின் உள்ள வெறியும் கொஞ்சம் அடங்கியது. தேடிய இடத்துக்கு வந்து விட்டனர். கூடையை இறக்கி வைத்தாள். வலிமிகுந்த உடம்பை ஒருமுறை நெளித்து வளைத்துக் கொண் டாள். 66 86 "வான்வில்லோ ! ” என்பர் வர்ணனையாளர் அருகே இருந்தால்! மான் துள்ளுமா இப்படி!" என்பர் ஏடெழுது வோர்! “ ஒரு விநாடி அப்படியே வளைந்து நில், போதும். உலகை விலையாகக் கேட்கும் ஓவியம் தீட்டுகிறேன் என்பான் சித்திரக் காரன் அருகே நின்றால்! அத்தகைய தோகைமயிலாள், தன் துணைவனுக்கு இரவுத்துணை தேடி எழுந்து விட்டாள் இழி மகளின் இல்லத்துக்கு. அலங்காரக் கரங்களால் அந்த வீட்டின் கதவைத் தட்டினாள். தட்டுவதற்கு முன் திறக்கப்பட்டது வீடு. திறப்ப தற்குமுன் எட்டிப்பார்த்தது ஓர் முகம். அந்த முகம் கண்டார் மௌத்கல்யர். “ சுகம் கண்டேன் ! சுகம் கண்டேன் !" என்று சுருதிவிட்ட வித்வான்போல் கூவினார். சுருக்கம் விழுந்த முகத்திலே பயங்கரமான ஒளி! ரத்தங் கசியும் கன்னங்களிலே புன்னகை உண்டாக்கிய ஆழமான பள்ளம்! கீறிக் கிடக்கும் உதடு களிலேயே காமக்கிறுக்கு வெளிப்பட்டது. விரலற்ற கரம் நீட்டி அந்த வேசிப் பெண்ணை ஆசையுடன் வாழ்த்தினார். குஷ்டரோகி யின் கும்மாளங்கண்ட இல்லத்துக்காரி விஷயம் என்ன ?” என்றாள். “எல்லாம் நம் சொந்த விஷயமே!" என்றார் ரிஷீஸ்வரர். 6 நளாயினி பேச ஆரம்பித்தாள். 86 66 பெண் பாவாய்! இவர் என் கணவர். நான் பதி சொல் தவறாத பாவை. உன்னகம் நாடி வரவேண்டு மென்றார். மனங் கோணாமல் நடந்து கொள்ளடி மாதரசி! " அவர் தாசிப்பெண், நளாயினியின் வார்த்தை கேட்டுத் திடுக் கிட்டாள். 'கணவனைத் தாசி வீட்டுக்கு அழைத்துவரும் மனை வியை இன்றுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்!' என்று தனக்குத்