பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழமுடியாதவர்கள் 171 கடவுள்-அந்தக் _வுள்- அந்தக் கற்பனைக் பெயரால் ஏற்பட்ட தலைவிதி- தலைவிதிக்காளான சமுதாயம்—அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம்-அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள்-வாழ முடியாதவர்கள் ! மங்கலான வெளிச்சம் பொழுது சரியாக விடியவில்லை. வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு, காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள் அவனையறியாமல் மூடிக்கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச் சாமி நிற்கவேயில்லை ; பைத்தியக்காரனைப் போல போல நடந்து கொண்டேயிருந்தான். காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன்னத்தில் கைவைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந்திருந்தாள். 'திலோத் தமா சினிமாப் பட விளம்பர வண்டி தெருவில் போய்க் கொண்டிருந்தது. ,