பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளாயினி 11 க்ஷமித்துவிடு நளாயினி! உன்போன்ற வைராக்யமுள்ள புண்ய வதியையும்-பத்தினியையும் ஈரேழு பதினாலு உலகிலும் காண நீ பத்தினி-நீ பத்தினி!” முடியாது. 66 உலகா நீ என்னை உணர்ந்து கொண்டால் போதும்-நான் உன்னை மன்னிக்க வேண்டாம். நீ என்போல் கற்புக்கரசியாக இரு ! என் போன்ற பத்தினிகளைப் பின்பற்று! நான் வருகிறேன். இதைச் சொல்லிவிட்டு நளாயினி தன் ஆசிரமம் நோக்கிப் போனாள். உலகாவும் தன் தவற்றை உணர்ந்து, “நளாயினி பத்தினி என்று தோத்திரம் செய்தவாறு அதைவிட்டு நகரு கிறாள். அப்போது ஒரு வாலிபன் ஓடிவந்து உலகாவின் கண் களைப் பொத்துகிறான். இருவரும் அங்குள்ள சோலைப் பக்கம் போய்விடுகிறார்கள், சிரிப்பைக் கொட்டியபடியே ! விம்மி விம்மி அழுதபடி ஆசிரமத்துக்குள்ளே நுழைந்து தரையில் குப்புற விழுகிறாள் நளாயினி. அவளது நீலத் திருவிழி களிலேயிருந்து நீர்வீழ்ச்சிகள் புறப்படுகின் றன. முழு நிலவை மறைக்கும் முகிலென அவள் முகத்தை மறைக்கிறது விரிந்து கிடக்கும் கருங்கூந்தல். சோலையின் பக்கமிருந்து ஒரு கீதம் ஆசிமரத்துக்குள்ளே நளாயினி அந்தக் கேட்கிறது. அழுது கொண்டேயிருக்கும் கீதத்தைக் கவனிக்கிறாள். ஆம் - உலகாவின் குரல் அது! அதோடு இன்னொரு ஆண் குரலும் கீதமிசைக்கிறது! 'என்னைப் பத்தினியென ஒத்துக்கொண்டு-என் கரங்களைக் கண்ணிலே ஒத்திக்கொண்ட உலகா தன் காதலனுடன்-கள்ளக் காதலுடன் கனி மரச் சோலையில் இன்ப கீதம் பாடுகிறாள். என் வயதுதான் அவளுக்கும்; அவளைவிட அழகி நான். நானோ இங்கே நாதியற்றுக் கிடக்கிறேன். "தேனே! மானே!" என்று அவளை வர்ணித்துக் கொண்டிருப்பான் அவள் காதலன்.' இப்படி எண்ணாததெல்லாம் எண்ணுகிறாள் . நளாயினி. மீண்டும் அழுகிறாள். ஆசிரமத்துக் கதவு திறக்கப்படுகிறது. அழுகையை நிறுத்தினாள். ஆனால் கண்களைக் துடைக்கவில்லை ; கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே பெண் உள்ளே வருகிறாள். ஏறத்தாழ நளாயினியும் அவளும் ஒரே மாதிரி காணப்படு