பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் கிறார்கள். இருவரும் சேர்ந்து நின்றால், யார் நளாயினி?" என்று கண்டு பிடிப்பதே கஷ்டமாகிவிடும். வந்த பெண், நளாயினி அருகில் உட்காருகிறாள். நளாயினியும் எழுந்து உட்காருகிறாள். QUIT!" என்று தேம்பியபடி வரவேற்கிறாள் dd வா, இதயா நளாயினி.

    • 15OT IT! ஏனம்மா இப்படி எப்போதும் அழுது கொண்டே

யிருக்கிறாய்? 'காரணமா கேட்கிறாய் ; இதயா! தணலிற் புழுவாய்த் தவிக்கிறேன் நான் என்பதை நீ அறிய மாட்டாயா? அதோ ஜாடியாகக் கூவும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்கிறாயா நீயும்! சோலைப்புறமிருந்து காதலர் மீட்டும் வீணாகானம் எத்தகைய விரகதாபத்தை ஒரு பருவ மங்கைக்கு எழுப்பும் என்பதை நீ அறியமாட்டாயா! அறிவாய்! இதயா ! அனைத்தும் அறிவாய்! அறிந்தும்-எனக்கு ஆறுதல் கூறுவதற்காக இப்படி மெளனம் சாதிக்கிறாய்- இல்லையா !" "உண்மைதான் நளாயினி! உலகா உன்னைப் பத்தினி என வாழ்த்தினாள்; அதையும் மறைந்து நின்று கேட்டேன். அந்தப் புகழ் வெளிச்சம் மட்டுமே போதுமென்று போதுமென்று திருப்தி அடைய வேண்டியதுதான்!" இதயா! உண்மையாகச் சொல்! நான் பத்தினியா? எப்படி? எப்படி?” 66 ஆமாம் ! குஷ்டரோகம் பிடித்த கணவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே!' 66 கிண்டல் செய்யாதே-இதயா! குஷ்டரோகம் பிடித்தவ னோடு கூடிக் கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை டு ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான் அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா, இதயா ! 6 6 என் . " ! நானறியாதது ஒன்றுண்டா நளாயினி! ஆனாலும், உலகா நம்பியிருக்கிறாள்; உன் பதி பக்தியை! குஷ்டரோகியைத் தாசி வீட்டுக்குத் தலையிலே தூக்கிக் கொண்டு போனதைப் பெரிய பதிபக்தி என உலகா எண்ணுகிறாள்.'