பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளாயினி 13 6 "தலையில் தூக்கிக்கொண்டு போனேன் என்கிறாயே நீயும் ! திருத்திக்கொள் ! கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டுத் தலையில் தூக்கிப்போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் போனேன். 66 கூடையில் வைத்துத்தான் கொண்டு நளா! உன் கணவன் எவ்வளவு கடுமொழிகளைக் கூறினாலும் - எதிர்த்து ஒரு சொல் கூறாத கற்பரசி என நேற்றுக் கூட உலகா என்னிடம் உன்னைப் புகழ்ந்தாள்.' 66 கணவன் திட்டினான்-நான் மறுமொழி பேசவில்லை; உண்மைதான் ! குஷ்டரோகிதானே திட்டுகிறான் என்று அலட்சியப் படுத்தினேன். நானும் அவனுடன் பேசினால் பேச்சு வளரும். அந்த வாதத்தின் காரணமாக அவனோடு நெருங்கி நின்று வார்த்தையாட வேண்டும். அதற்காகத்தானடி, அந்தக் குட்டம் பிடித்தவன் குரைத்துக்கொண்டிருக்கட்டும் விட்டு விட்டேன் !” “உம்... எப்படியோ என்று பத்தினி என்று பட்டம் பெற்று விட்டாய்! பார் புகழும் பதிவிரதை-பதிபக்தி மிகுந்தவள் என்றெல்லாம் உலகா புகழ்ந்துவிட்டாள் உன்னை ! 06 உலகாவுக்கு என்னடி தெரியும் என் உள்ளத்தில் இருக்கும் எரிமலை? பத்தினிப் பட்டம் போதுமா பருவக்களை சொட்டும் இந்தப் பரிதாபத்துக்குரியவளுக்கு? சொல்லடி இதயா ! சொல்லு! சுகவாழ்வுக்கு வழி சொல்லு!' 66 வழி சொல்லுகிறேன் - நளாயினி ! நான் நளாயினி! நான் ஒரு புதிய வரம் தருகிறேன். இந்த ஜென்மத்தைச் சீக்கிரம் கழித்துவிட்டுவிரைவில் அடுத்த ஜென்மம் எடு! அந்த ஜென்மத்தில் நீ திரௌபதியாகப் பிறக்கப் போகிறாய்! ஒரு கணவன் இருந்தும் உனக்கு உற்சாக மில்லை. உல்லாசமில்லை. உள்ளமோ வேதனைக் களமாயிருக்கிறது உனக்கு ! ஆகவே அடுத்த பிறப்பில் ஐந்து கணவரோடு ஆனந்த வாழ்வு வாழ அருமையான வரம் தருகிறேன். 6 6 இதயா! இது உண்மையா ?