பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் வைகுந்த நாதனின் கோயிலைக் கட்டி முடித்து சேமித்து, விடுவோம்! " " “கட்டளை தாயே! ” சத்தியவதியின் எண்ணத்தை நிறைவேற்ற அர்தோல் புறப்பட்டுவிட்டான். முடிசூட்டு விழாவுக்கு முன்கூட்டியே அழைக்கப் பட்டிருந்தும் ஜெகவீரனுக்கு அங்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை. சத்தியவதி சாகசக்காரியா? அல்லது பெற்றெடுத்த மாதா பொய்க்குற்றம் சுமத்துகிறாளா? அல்லது தம்பி அர்தோல் தான் துரோகம் புரிகிறானா? என்ற மனப்போராட்டம் அவன் உள்ளத் தில் குமுறி எழுந்தது. அந்தப்போரின் உச்சக் கட்டமாக அவனுக்கு ஒரிசாவிலிருந்து ஓர் ஓலையும் வந்து சேர்ந்தது. பிரித் துப் படித்தான்; மீண்டும் கண்ணை விரித்துப் படித்தான். ஆம் அவனது அன்னை எழுதிய கடிதம்தான் அது. 'அன்புச் செல்வா! அணைபோடச் சொன்னேன், வெள்ளம் வருவதற்கு முன்பே! கணைதொடுக்கிறேன் என்றாய் அப்போது. இப்போது விளைவு விபரீதமாகி விட்டது. ஒவ்வொரு அர்த்த ராத்திரியிலும் அர்தோலைச் சந்திக்கச் சத்தியவதி புறப்பட்டு விடுகிறாள். இதை என்னால் மெய்ப்பிக்க முடியும். கேட்டால் சொல்லுகிறாள் : கோயில் கட்டத் திட்டம் போடுகிறோம் என்று! களங்கம் நமது வம்சத்தை அழித்து விடுவதற்கு முன்பு நீ புறப்பட்டு வா! உன் அன்னை அமிர்த ராணி' 99 ஓலையைக்கண்ட ஜெகவீரன் தலைசுழன்றது. டில்லி பாதுஷா வின் பட்டாபிஷேக மண்டபத்திலே அமுத வீணையின் இன்ப நாதம்! வீரசிம்மனின் மனக்குகையில் அறுந்த நரம்புகளின் முறுக்குப் பிரியும் ஜீவனற்ற கீச்' ஒலி ! அங்கே முரசின் ! முழக்கம், இங்கே ஒரிசா அரசின் கலக்கம். உடனே புறப்பட்டு விட்டான் தன்னகம் நோக்கி ! இரவுநேரம். வைரம் நிறைந்த பேழை. அந்தப் பேழைதான் ராமருக்குக் கோயிலாக உருவெடுக்கப் போகிறது. கோயில் கட்டு வதற்கு முன்பே கோயிலில் வைக்க விக்கிரகம் தயாராகிவிட்டது. அதன் முன்னே அமர்ந்து ராமகீர்த்தனை பாடிக்கொண்டிருக்