பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தமதி எரிமலை ஆகிவிட்டதப்பா என் நெஞ்சம்; தாங்க முடியவில்லை இந்த வேதனையை என்னால்! தாய்க்குப் பிள்ளையில்லை யென்கிறார்கள். எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும் ; அந்தப் பிள்ளையையாவது ஒழுங்காக வளர்க்கிறார்களா என்றால். அதுவுமில்லை ; அதைச் சித்திரவதை செய்து சீரழிக்கிறார்கள். எப்படியப்பா சுமக்க முடியும் இந்த சோகச் சுமையை? சொல் சுந்தர் ; நீயே சொல்! சுவையான செய்திகளையே உன்னோடு தினம் தினம் பேசியிருக்கிறேன் ; இன்று உன்னையும் அழவைக்கும் செய்தியைப் பேசுகிறேனேயென்று என்மீது வருத்தப்படாதே சகோதரா! சகிக்க முடியவில்லையடா இந்தக் கொடுமையை! என் இருதயச் சுமையை உன் கனிவான மொழியொன்றினால் மட்டுமே குறைக்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நீயும் தோற்றுவிடுவாய்! அப்படி நொந்து போயிருக்கிறேன் நான்.” 66 “அன்பா! அழாமல் பேசு-முதலில் விஷயத்தைச் சொல்! அப்படி யென்ன வராதது வந்துவிட்டது?" “வராதது வந்துவிடவில்லை-வழக்கமாக வஞ்சகர்கள் செய்யும் வேலைதான் இது! ஆனால் இது, இதுவரை நடக்காத இடத்திலே நடந்து விட்டது!” 66 மாமனார் வீட்டிலா ?" குடும்ப விஷயமில்லை சுந்தர் நான் பேசுவது! கொந்தளித் துக் குமுறிவிட்ட கோர நிகழ்ச்சியடா இது!”