பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 66 66 "தலைப்புதானே!” அல்ல! அல்ல! தலைப்பைப்பற்றியல்ல நான் பேசுவது! கருத்துக்களும் உரையாடல்களும் களவாடப் பட்டுவிட்டன பாவிகளால்!” • 6 பதறாதே! நான் என்றைக்காவது இப்படிப் பதறிப் பார்த்திருக் கிறாயா? என் அன்பு உருவான தந்தையின் பிணத்தைப் பார்த்த போது கூட மரம் போலத்தானே நின்றேன்-அழுதேனா பதறினேனா? சுந்தர்! உனக்குத்தான் தெரியுமே ; என் இதய ராணி, இல்லறத்தின் விளக்கு, இமைகளைத் திறக்காமல் மூடி இறப்புலகம் ஏகிவிட்ட நேரத்தில் கூட வாய்விட்டுக் கதறவில்லை. நான் அமைதியாகத்தான் நின்றேன்-பட்டமரம்போல் ஆனேனே தவிரப் பதறவில்லையே சகோதரா! அப்பா ! அப்பா! என அழைத்துத் தாவிய செல்வன் செத்துவிட்டபோதும் கண்ணீர் என் உகுத்திடவில்லை - கலங்கினேன் - கதறிடவில்லை ! அதுவும் தெரியும் உனக்கு ! அருமைச் சகோதரனே! இப்போது நான் பதறுகிறேன்- துடிக்கிறேன்! இதை நான் மறைத்திட விரும்பவில்லை. கழுத்திலே அரிவாள் பாய்ந்திருந்தால் தலைவேறு முண்டம் வேறாகப் போயிருக்கும்! இந்த அரிவாள் இருதயத்தைக் கொத்திவிட்டதடா என் சுந்தர்! அலறுகிறேன்-இந்த உலகத் தின் காதிலே விழட்டும் என்ற நினைப்பிலே கூவுகிறேன்-கூச்ச லிடுகிறேன்!-கூடாது -கூடாது ! கோழைபோல் அழக்கூடாது, என்று நீ கூறுகிறாயா?-என் ஒருவனின் கண்ணீர் அந்தப் பாதகர்களிள் பாறாங்கல் மனத்தைக் கரைத்துப் பண்படுத்திவிடும் என்பதால் அல்ல நான் அழுவது! பழம் கிடைக்கும் அழுதால் என்று குழந்தை நினைக்கிறதே அது போலவோ ; பலன் கிடைக்கும் அழுதால் என்று பாசாங்குக்காரி நினைப்பாளே அது போலவோ அல்ல நான் அழுவது! மண்டையைப் பிளந்தால் ரத்தம்தானே கொட்டுகிறது-அது அது போலத்தான் கண்ணீரும் கொட்டுகிறது. என் கண்ணீருக்குச் சக்தியிருக்கிறதோ இல்லையோ- அதைப்பற்றி ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை-நான் அழுகிறேன்- இல்லை - அழும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு விட்டேன்!" 66 புண்பட்டிருக்கிறாய்-கொஞ்சம் ‘மிகவும் மௌனமாக இரு!" நிம்மதியாக