பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஏற்கனவே அவளது உடல் இளைத்துப் போய்விட்டது. இனி இந்தக் குழந்தை பால் என்ற பெயரால் வேறு அவள் இரத்தத்தை யெல்லாம் உறிஞ்சி, அவளது உடற்கட்டையும் குலைத்துவிடும். இப்படி ஓர் அச்சம் ஊட்டும் அவலக் குரல் ஓநாயின் தொனியை வெல்லும் விதத்தில் அவள் நெஞ்சத்தின் ஒரு மூலையில் எழுந்து, இரத்த அணுக்களில் எல்லாம் எதிரொலித்து, அவளை நடுக்கம் கொள்ளச் செய்தது. எழுந்து நின்று நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். அறையில் மாட்டப்பட்டிருந்த ஹாலிவுட் சினிமா நடிகைகளின் அரை ஆடைப் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். முழுங்கால் அளவுத் தண்ணீரில் நின்றுகொண்டு முரளிதரனிடம் தாங்கள் இழந்த ஆடைகளைத் திரும்பக் கேட்கும் கோபிகளின் படங்களைப் பொறாமையுடன் நோக்கினாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள். குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பித்தால் எழிற்கட்டுக் குலைந்துவிடும்-இளமை அழிந்துவிடும்!" என்று அவள் நெஞ்சம் மீண்டும் புலம்பி விம்மியழுதது. , 86 " விழிகள் வேறு திசையில் திரும்பின. ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் நுழைந்த பார்வை, தூரத்தில் மாட்டுத் தொழுவத்தில் தாய்ப்பசுவிடம் பால் குடிக்கும் கன்றின் மீது விழுந்தது. கன்றின் முதுகில் தாய்ப்பசு தனது நாக்கினால் நக்கிக் கொண்டிருக்கிற காட்சியையும் அவள் கண்கள் கண்டன. தோட்டத்துச் சுவரின் பக்கம் 'கீரிச்' என்ற ஓர் ஒலி ! அங்கே பார்த்தாள்; குரங்கு தன்குட்டியைத் தூக்கிக்கொண்டு மதில் மேலிருந்து மரத்திற்குத்தாவியது. கூடத்து மூலையில் "உச் உச்! என்ற சப்தம் கேட்டது. பார்த்தாள்; அவர்கள் வீட்டு நாய், தன்னுடைய ஐந்து குட்டிகளிடமும் தன் பால் சுரப்பிப் பையை ஒப்படைத்துவிட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. மேலே "மியாவ் மியாவ்" என்ற ஒலி காதைப் பிளந்தது. பார்த்தாள்; குட்டிகள் புடைசூழ வீட்டுப் பூனை பரண்மீது தன் படுக்கையை அமைத்துக் கொண்டு தன் குழந்தைகளின் சங்கீதத்தில் மெய்ம் மறந்து கிடந்தது. அந்தப் பூனை அந்த வீட்டுக்கு வந்து இப்போது மூன்றாவது தடவையாக அரை டசன் குட்டிகளைப் போட்டுப் பால் கொடுக்கும் வேலையைக் கவனித்து வருகிறது என்பதும் அவளுக்குத் தெரியும்.