பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் “ ஏழைப்பெண் மரகதத்தைச் சேகருக்கு மனைவியாக்கியது நல்லதாயிற்று பார்த்தீர்களா எவ்வளவு துடன் சந்திரனைத் தழுவினாள் சௌந்தரி. என்ற பரவசத் அந்த அணைப்பில் அவன் கண்ட சுகத்தில் “நீ புத்திசாலியடி என் தங்கமே !" என்று உளறினான் சந்திரன், மழலை பருகிடவேண்டிய தாய்ப்பாலை மருந்து பருகியது. பருவத்தின் பொலிவு குலையாத சௌந்தரி, தன்னைக் கண்ணாடியில் ஏற இறங்கப் பார்த்துக்கொண்டு பெருமிதத்துடன் நாலு பேர் மத்தியில் நடந்தாள். கணவனுடன் கடற்கரைக்குச் சென்றாள். மரகதம் படும் கஷ்டத்தை இனியும் சகித்துக் கொள்ளச் சேகரன் தயாராக இல்லை. மரகதத்தைத் திருமணம் செய்து. கொள்ள அவன் முதலில் விரும்பவில்லை என்பது உண்மைதான். அவள் அழகில்லாதவள் அல்ல. குடும்பத்திற்குத் தகுதியற்ற பெண்ணல்ல. ஆனால் ஏழை. அதனால் அவன் தயங்கினான். ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது கூடாது என்ற கொள்கை உடையவனல்ல அவன். தன்னுடைய வீட்டுச் சூழ்நிலைக்கு ஒரு பெரிய வீட்டுப் பெண் வந்தால்தான் அவள் மற்றவர்களுக்குச் சமமாக வாழ முடியும்; ஏழையாயிருந்தால் அடிமையாக வேண்டியதுதான் என்ற காரணத்தினாலேதான் ! மரகதம் தன்னை விரும்புகிறாள் என்று சௌந்தரி கூறிய பிறகு அவனையறியாமல் அவள்மீது ஒரு பிரியம் ஏற்பட்டு விட்டது. அது திருமணத்தில் வந்து முடிந்து, இருவரும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராகவும் ஆகிவிட்டனர். அவன் எதிர்பார்த்தபடி மரகதம் அந்த வீட்டில் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டாள். அண்ணனிடத்தில் வைத் திருக்கிற அன்புக்கும் மதிப்புக்கும் ஊறு தேடக்கூடாதே என்பதற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையைக் கடைப் பிடித்து வந்தான். அந்தப் பொறுமை அணையையும் உடைத்துக் கொண்டு ஒரு நாள் குமுறியெழுந்து விட்டான். முதல் நாள் இரவு சந்திரனின் குழந்தைக்கு இலேசாகக் காய்ச்சல்; சேகர் குழந்தைக்கு வயிற்று நோய். இரண்டும் மாறி மாறி இரவெல்லாம் அழுது, தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தன. மரகதம் கண்ணை மூடவில்லை. இரண்டு தொட்டில்களையும் ஆட்டுவதும் “ஆராரோ' பாடுவதும்