பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் யிழந்து தொங்கும் தலையை முழங்காலிலோ-பக்கத்திலிருப்பவர் தோள் பட்டையிலோ-அல்லது ஜன்னல் கட்டையிலோ முட்டுக் கொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்த காட்சி பரிதாபமாயிருந்தது. இந்தக் 'கும்பகர்ண லோக'த்தில் கொட்டை கொட்டையாக விழித்துக் கொண்டிருந்தவர்களும் இல்லாமலில்லை. நூற்றுக்கு ஒருவராவது இருக்கத்தான் செய்தனர். வண்டியில் ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியாகக்கூடக் கால்களை வெளியே சிறிது நீட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுப் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட ஒரு பலகையின் மூலையில் உட்கார்ந் திருந்த ஒருவன், அலுப்பைப் பற்றிய அக்கறைகள் எதுவு மில்லாமல் ஏதோ ஓர் உணர்ச்சியில் அங்குமிங்கும் பார்ப்பதும், பலகைக்குக் கீழே கவனிப்பதுமாயிருந்தான். அவனுக்கு எதிரில் மற்றொரு பலகையில் மற்றொரு வாலிபன், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் விழிகள் மூடி யிருந்தனவே தவிர-அவன் தூங்கவில்லை யென்பது தெளிவாயிற்று. விழி களும் முக்கால் பாகந்தான் அடைபட்டிருந்தன. கால்பாகத்தின் வ வழியாக அவன் பார்வை எதிரில் உட்கார்ந்திருக்கும் வாலிபனை யும் பலகைக்குக் கீழே படுத்திருக்கும் ஒரு பெண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனும் சந்திராவும் தங்கள் குழந்தையுடன் சென்னையில் தான் ஏறினார்கள். ஏ அவர்கள் ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்துக் கெல்லாம் எதிர்ப் பக்கத்தில் அந்தத் தூங்காத வாலிபன் வந்து உட்கார்ந்தான். வந்தவன் எதிர்பாராதவிதமாக அங்கு வந்து அமரவில்லை. எல்லாப் பெட்டிகளையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாகக் கவனித்துவிட்டுக் கடைசியில் இங்கு வந்து ஏறிக் கொண்டான். சந்திராவின் கையிலிருந்த குழந்தை அருகிலிருந்த ஒரு கிழவியின் நரைமயிரைத் தன் தளிர்க்கரங்களால் பிடித் திழுக்கவே-கிழவி பொக்கைவாய்ச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டே அந்த மழலையிடமிருந்து தலையை விடுவித்துக் கொண்டாள். இதோடு கிழவி சும்மாயிருக்கவில்லை. கிழவிகளின் குணமே-நல்லதோ கெட்டதோ ஏதாவது பேசிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா?... அதுவும் குழந்தையென்றால் 6 கேட்க வேண்டுமா? " என்னாடி கண்ணு! உன் பேரு என்ன ?" என்று கிழவி கொஞ்சினாள். "மூர்த்தி” என்று கணீரென்று உச்சரித்தது