பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபலம் 17 குழந்தை. "உங்க அப்பா பேரு?" என்றாள் கிழவி. "எங்கப்பா பேரு குமரேஸ். உன் பேரு என்னா?” என்று குழந்தை கேட்ட வுடன்-கிழவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. குமரேசும்-சந்திரா வும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அப்போது எதிர்ப் பலகையிலிருந்தும் ஒரு சிரிப்பு வெடித்தது. அதைச் சந்திரா கவனித்தாள். சிரித்தவனும் சிரிப்பினூடே, சந்திராவைத்தான் உற்றுப் பார்த்தான். உ அவனைப் பார்த்த சந்திரா திடுக்கிட்டு அப்படியே ஸ்தம்பித்து விட்டாள். ஆனாலும் திடப்படுத்திக்கொண்டு குழந்தையின் விளையாட்டைக் கவனித்தாள். இடையிடையே அவள் நீலக் குறு விழிகள் மட்டும் எதிர்ப்பக்கத்திலுள்ள அந்த வாலிபனையே அடிக்கடி விழுங்கிக்கொண்டிருந்தன. அந்த வாலிபன் வாலிபன் நல்ல அழகன். விசாலமான கண்கள்; அரும்பு மீசைகள் ;

அழகை

அதிகப்படுத்த பளபளப்பான பட்டுச்சட்டை; அவனது பெரிய கண்கள் சந்திராவைப் பார்க்கும்போதெல்லாம் போதையேறிக் காணப்பட்டன. சந்திராவும் தனக்குப் பக்கத்திலேயே கணவன் இருப்பதையும் மறந்தவள்போல, அவனை அடிக்கடி பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். இதைக் குமரேசும் ஜாடையாகப் புரிந்துகொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சந்திரா தன் கணவனோடு ஏதாவது பேசுவதும், குழந்தைக்கு விளை யாட்டுக் காட்டுவதும், அதே நேரத்தில் எதிரே உள்ளவனைக் காணுவதுமாயிருந்தாள். குமரேசுக்கு குமரேசுக்கு ஏதாவது சொல்லிவிட வேண்டுமென்று மனம் குமுறியது. தன் மனைவி-தனக்கருகில் உட்கார்ந்துகொண்டே இன்னொருவனின் அழகை ரசிப்பதென்றால் இதை அவனால் நினைக்கவே முடியவில்லை. என்பது அழகுக்காகத்தான் சந்திராவை அவன் மணம்புரிந்தான். அவள் வீட்டுக்கு வந்தபிறகு அறிவும் நிரம்பியவள் கண்டு மகிழ்ச்சிகொண்டான். குதூகலமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு அந்த ரயில் பிரயாணம் முட்டுக் கட்டையாகத்தான் வாய்த்தது. இவன் நெஞ்சிலே இந்தப் போராட்டம் -ஆனால் சந்திராவோ திர்ப் பலகைக்கு வீசும் கண்களை நிறுத்தியபாடில்லை. குமரேஸ் கொந்தளித்தான். முழுதும் கவனித்து ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்ற தீர் மானம்-அவனை அமைதிப்படுத்தியது. குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டது. புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. க2 வண்டியும் விழுப் அந்தப் பெட்டியில்