பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபலம் நெல்லிக்குப்பத்தைத் 19 தாண்டிவிட்டது. சந்திரா . வண்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் பொற்கரம் குழந்தை மூர்த்தியை அணைத்தபடி இருந்தது. அந்த வாலிபன் ஏதோ ஒரு புதுத் துணிவுடன் பெருமூச்சுவிட்டான். குமரேசையும் கூர்ந்து நோக்கிக்கொண்டான். குமரேஸ் தன் துப்பறியும் வேலைக்குத் தயாராகத்-தூக்கத்தால் துவண்டிருப்பவனைப்போல இருந்தான். வாலிபனின் கைகள் சந்திராவின் கன்னத்தை வருடின. சந்திரா விழித்துக்கொண்டாள். வாலிபன், நடுங்கிய படிக் கைகளை எடுத்துக்கொண்டான். சந்திரா விழித்த வேகத்தில் குழந்தையும் சிணுங்கியது. சந்திரா மேலே நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்தாள். அவன் தூங்கி வழிந்துகொண்டிருந் தான். அவளை ஒரு முடிவுகட்டுவதற்காக இமைகளின் இடுக்கில் ஒளிந்துகொண்டிருந்த அந்தப் பயங்கர விழிகளை அவள் பார்க்க வில்லை. கணவனைப் பார்த்த கண்களோடு அந்த வாலிபனையும் பார்த்தாள். அவன் உமிழ்நீர் விழுங்கினான். சிணுங்கிடும் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தபடித் தூங்கிவிட்டாள். . எத்தனையோ முறை, அழுதிடுங் குழந்தைக்கு அவள் முத்த மிட்டுப் பிறகு தூங்கவைப்பதைக் குமரேஸ் பார்த்திருந்தாலுங் கூட, இந்த முத்தம் அவனை நெருப்பில் தள்ளி எண்ணெயை ஊற்றுவதாயிருந்தது. . . சிறிது நேரம் கழிந்தது. வாலிபனின் கரங்கள் மீண்டும் சந்திராவின் கன்னத்தைத் தொட்டன. சந்திரா விழித்தாள். விழித்தவள் குழந்தையைத் தட்டியபடி மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். குமரேசால் அங்கு உட்கார முடியாத நிலைமை ஏற்பட்டு ஏற்பட்டு விட்டது. எரிமலையாகிவிட்டான்! பூகம்ப மானது அவன் உள்ளம்! பயங்கரமான ஒரு முடிவுடன் எழுந்தான். குழந்தையைக் கையில் தூக்கினான்; குழந்தை அழுதது. சந்திரா விழித்துப் பார்த்துத் தன் கணவன் கையில் குழந்தையைக் கண்டு - தூங்கத் துவங்கினாள். குழந்தையுடன் குமரேஸ் ஐந்தாறு பலகைகளைத் தாண்டி அப்பாற் போனான். வாலிபனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. ரயில் வண்டி புயல் வேகத்தில் பெருமூச்சு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. குமரேஸ் சுற்றுமுற்றும் பார்த்தான்; கையி லிருந்த குழந்தையை அந்த அந்தகாரமான இருளில் ஜன்னல்