பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காவடி 6 6 'ஆட்டக் காவடி என்றால் பக்திக் காவடி அல்ல! பக்திக் காவடி எடுத்துப் பிரார்த்தனை செலுத்துகிறார்களே, அவர்களுக்கு முன்னே நடைபெறுகின்ற காவடி ஆட்டக் கச்சேரி-அவ்வளவு தான்! ஆட்டக் காவடி எடுத்து ஆடுகிறவர்கள் பல பேர் ழெட்டுக் குடுக்கை மதுவை உள்ளே செலுத்தியபடி ஆடிக் கொண்டே இருப்பார்கள். பக்திக் காவடி எடுப்பவர்கள் மட்டும் ஒழுங்கோ என்று கேட்கிறாயா? அவர்கள்தான் மதுவைவிடப் பயங்கரமான பக்திப் போதையில் இருக்கிறார்களே! அதனால் நான் சொல்வதைக் கேள், கனிமொழி! நான் நடத்தப் போகும் ஆட்டக் காவடிக் கச்சேரி, பக்தியின் பாற்பட்டதல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்! கழுத்திலே காவடியிருக்கும் ; அவ்வளவுதான் - கருத்திலேயும் ஆண்டவனின் சேவடியிருக்கும் என்று நினைத்துவிடாதே! அந்த மூட நம்பிக்கைப் போதை-என் எதிரே அலகு குத்திக்கொண்டு பால் செம்பு கட்டிய காவடியைச் சுமந்து வருவார்களே, அந்தப் பக்தர்களிடத்திலேதான் இருக்கும். என் காவடியில் 'பாவலா' இருக்குமே தவிர பால் இருக்காது! ஆட்டக்கலை இருக்கும் - அறிவுக் கொலை இருக்காது ! மயில் தோகை, காவடியின் முன்னே இருக்கும்-மங்கை உன் நினைவு தான் மனத்தில் இகுக்குமே தவிர மயிலேறும் முருகனைப் பற்றிய மடமைக் கனவு இருக்காது ! - உத்திரவு கொடு என் தங்கமே! : நூறு ரூபாய் தருவதாகச் சொல்லுகிறார்கள் -நாளெல்லாம் பாடுபட்டாலும் நாலைந்து மாதம் சேர்ந்தாற்போல் உழைத்தாலும்