பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காவடி 23 பணக் முழுசாகக் காண முடியாத பணம்-நூறு ரூபாய்! பழனிக்குப் போய் அங்கே ஆடினால், புதிய கிராக்கிகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். உத்தேசமாக இரண்டு மூன்று கிராக்கி கிடைத் தால் போதும்-முந்நூறு ரூபாயாவது மிச்சப் படுத்திக்கொண்டு வருவேன். அனுமதி கொடு கனிமொழி! நாளைக் காலையிலே புறப்பட வேண்டும்; பிரார்த்தனைக்காரர்கள் பெரிய காரர்கள். அவர்களிடத்திலே வாக்களித்துவிட்டு வந்துவிட்டேன், நிச்சயம் வருவதாக ; தடை சொல்லாதே தங்கம்! அவர்களை ஏமாற்றி விட்டால், அவர்களுக்கு வேறு ஆட்டக் காவடிக்காரன் கிடைக்க மாட்டான். சாகிறவரையில் என்னைச் கொண்டேயிருப்பார்கள் !-சரி என்று சொல்லு!-எங்கே? என்னைப் பார்! சரியென்று சொல்ல மாட்டாய்?.." சபித்துக் கனிமொழியின் முகத்தை ஆவலோடு நோக்கியவாறு கொஞ்சுந் தோரணையில் கந்தன் பேசிக்கொண்டே இருந்தான். கனிமொழியின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அவனைப் பார்த்தாள் அனுதாபத்தோடு! "பண ஆசைதானே உங்களை இப்படியெல்லாம் பேசச் செய்கிறது ! உடலிலே வலுவிருக்கிறது-உழைக்கக் கை கால்கள் இருக்கின்றன. கடவுள் சந்நிதானத்திற்குக் காவடி எடுப்பவர் களுக்குக் காவடி ஆடி, நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிடக் கைத்தறி வேலையிலே கிடைக்கிற பத்து ரூபாய், இருபது ரூபாய் எவ்வளவோ உயர்ந்தது, அத்தான்! வேண்டாம்; நான் சொல் வதைக் கேளுங்கள் - பக்கத்து வீட்டுக்காரர்கள் பரிகாசம் செய்வார்கள் ! 'சாமி இல்லை, பூதம் இல்லை என்று று சொல்லித் திருக்குறள் திருமணம் செய்து கொண்டான். அவன் இப்போது ஆட்டக் காவடி எடுத்து ஆடப் போகிறானாம்' என்று ஊரார் கை கொட்டிச் சிரிப்பார்கள், அத்தான்!” என அழுதாள் கனிமொழி. 66 ஆட்டக்காவடி என்றால் அர்த்தம் தெரியாதவர்கள் தான் சிரிப்பார்கள்!-இது ஒரு நடனம் போலத்தான் !” “ நடனம் என்றால் அந்த ஆட்டக் காவடி நடனத்தை ஒரு மேடையில் ஆடிக் காட்டுங்கள்! க் காட்டுங்கள்! பழனிக்குக் காவடி தூக்கும் பக்தர்களுக்கு முன்னால்தானா ஆட வேண்டும் ?” " பணம் வருகிறதே-பணம்!” "மானம் போகிறதே- மானம்!”