பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காவடி 66 25 ருந் முன்னொரு காலத்தில் ஆட்டக்காவடி நிபுணராயி தீர்கள்; அதையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தால்- பழனிக்குமட்டுமல்ல- திருச்செந்தூர், திருத்தணி, எட்டுக்குடி, கதிர்காமம் வரையிலேகூடச் செல்லலாம். இடையிலே பகுத்தறிவு புரியிலே நுழைந்துவிட்டோம். அத்தான்—அதைச் சற்று எண்ணிப் பாருங்கள் ! தெரிந்த குற்றத்தைப் பிறகு செய்ய மாட்டீர்கள்!” கந்தன் அசைவற்று நின்றுகொண்டேயிருந்தான். கனிமொழி யின் கண்கள் அவனையே நோக்கியபடி யிருந்தன. அவளது எண்ணங்களோ கடந்த கடந்த கால ஏடுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. கனிமொழி நெசவாளி வீட்டிலே உதயமான நீல நிலவு ; அவள் தந்தை நெல்லையப்பர் பழுத்த பகுத்தறிவுவாதி. ஒரே மகளைச் செல்லமாக மட்டுமன்றி, சிந்தனைத் தோட்டமாகவும் வளர்த்து வந்தார். பட்டிக்காட்டு நடையுடை பாவனைகளோடு பகுத் தறிவுப் பெட்டகமாகவும் விளங்கிடும் முதல் பெண்மணி கனிமொழியாகத்தான் இருக்கவேண்டுமென்று நெல்லையப்பர் பெருமையோடு கூறிக்கொள்வார். கனிமொழி, குழந்தை முதலே பகுத்தறிவுப் பாடசாலையின் மாணவியாக மாறிவிட்டாள். 66 தீபாவளி! தெருவெல்லாம் ரகளைப்படும் ! வர்ண மத்தாப் புக்கள்- வானவில்லை ஒத்த நிறங்காட்டும் வாண வகைகள் அவைகளை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள். அப்பா வாங்கித் தந்த தீபாவளி கொண்டாடாதே!' என்ற புத்த கத்தை வாசலில் உட்கார்ந்து கொண்டு உரக்கப் படிப்பாள். தெருப் பிள்ளைகள் கொளுத்தும், சீன வெடிகளோடு போட்டி போடும் இந்தச் சிங்காரச் சிட்டெழுப்பும் சிந்தனை முழக்கம் ! சோமவார விரதம் - மாரி, காளி பண் டிகை-திரௌ பதியம்மன் தீமிதி உற்சவம்-இப்படியெல்லாம் மனத்தைக் கவரும் திருவிழாக்கள் வரும்-போகும். கனிமொழியோ, அந்தக் குக்கிராமத்தில் இருந்தபடியே-குவலயத்துப் புதுமைகளைப் பற்றி எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள். கனிமொழி - தனி மரமானாள். அந்தக் கன்னியைத் தனியே விட்டுவிட்டுத் தந்தை காலமானார். தாயற்ற அவள் இப்போது