பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் பட்டத்துக்குரியவளானாள். அனாதைப் அவளது வாழ்க்கை எப்படியெப்படித் திரும்பப் போகிறதோ என்பது பற்றி ஊரார் ஆரூடம் ம் கணித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் அவள் வீட்டு வாசலிலே பம்பை, மேள வாத்திய ஒலி கேட்டது. ய எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அலட்சியம் செய்து விடும் அவள் அன்றைக்கு ஏனோ தெருப் பக்கம் திரும்பிப் பார்த் தாள். பார்த்தவள் கண்களைத் திரும்ப எடுக்க முடியாமல் திணறிப் போனாள். ஆட்டக் காவடி ஆட்டம்! அதிரூப சுந்தரன் ஒருவன்-அழகும் இளமையும் தேங்கிய உருவினன்—குன்றனைய தனது நெடுந்தோளில் ஆட்டக் காவடியைச் சுமந்திருந்தான். எழுச்சியூட்டும் பம்பை முழக்கம்-அதற்கேற்றாற்போல அவன் ஆடும் துடிப்பு நிறைந்த ஆட்டம் ! “ஆகா-அழகான வாலிபன்- அற்புதமான கலை !" என்று தனக்குள்ளேயே யாரோ பேசியது போலிருந்தது அவளுக்கு! கண்களைச் சிறிது திருப்பினாள்-திடுக் கிட்டாள் ! அந்த ஊர் மிராசுதார் மிருகண்டு முதலியார், அவரது தர்ம பத்தினி, பட்டணத்துக் கல்லூரியில் படிக்கும் அவரது மகன் - மூவரும் நெற்றியிலே அலகுகளைக் குத்திக்கொண்டு பக்தி பூர்வமான பால் காவடிகளைச் சுமந்தபடி நின்றார்கள். இ இப்போது கனிமொழிக்கு ஆட்டக் காவடிக் கலையும் வெறுத்து விட்டது. - 'அடப் பாவிகளே! அருமையான கலை- கலை-இதை விழலுக் கிரைக்கும் நீராக்குகிறீர்களே ! சந்தனத்தைச் சாக்கடை நீரில் குழைத்துத் தருகிறார்களே ! பாலோடு விஷம் கலந்தாலும்— விஷத்தோடு பால் கலந்தாலும் இரண்டும் ஒன்றுதானே !' என்றெல்லாம் எண்ணியபடி வாயிற்படியில் வியப்போடும் விசாரத்தோடும் நின்று கொண்டிருந்தாள். மிராசுதார் மிருகண்டு வின் பார்வை மட்டும் கனிமொழியின் பக்கம் திரும்ப ஆரம் பித்தது. தோளிலே காவடி! மனத்திலே கனிமொழி மந்திரம்! அத்துணை பக்திபூர்வமாக நின்று கொண்டிருந்தார் பண்ணையார்! 66 . ஊரதிர ஆடுகிறானே, காவடி ஆட்டம் - அவன்தான் கந்தன்!" என்று அடுத்த வீட்டுக்காரி கனிமொழியிடம் கூறினாள். குழப்பம் உந்தித் தள்ளக் கனிமொழி வீட்டுக்குள்ளே போய் விட்டாள். மிருகண்டு முதலியாரும் காவடியுடன் நகர்ந்தார்-கனி மொழியின் வீட்டுக் கதவைப் பார்த்தபடி!