பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைத்தொட்டி 33 இரவாகத்தானிருக்குமென நேரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள் ஒரு அம்மை! பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடுகிற அளவுக்கும் பிரார்த்தனையின் ரசம் மேலோங்கி நிற்கிறது. மறுபடியும் வர்ணனையைக் கவனிப்போம். குத்துவிளக்கின் ஒளியில் கட்டில் ஒன்று தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா? அதன்மீது மெத்தென்ற மஞ்சம்! மல்லிகை, முல்லை, ரோஜா மலர்கள் தூவப்பட்ட மஞ்சம்! விளக்கு-கட்டில்-மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் பால் நிலவு இல்லையேல் வானத்திற்கு அழகேது? அந்தப் பால் நிலவாக ஒரு மங்கை ; அந்தப் படுக்கையில் இருக் கிறாள். அவள் கொத்தலர் பூங்குழல் கொண்ட கோதை ! முடிவுகட்டி விடலாம். இரவு பெயரோ நப்பின்னை ! கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற்றதாக முடியாதே! அந்த மங்கையின் மாங்கனியன்ன மார்பகத்தின் மீது தனது மார்பகத்தை வைத்தவாறு பிரார்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். யார் அந்த ஆடவன்? ஆடவனா? அல்ல ; அல்ல-ஆண்டவன் ! அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை! 66 G ! மலர்மார்பா' வாய்திறந்து எனக்கருள்வாய்”! என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார் ; அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளி யறைக்குள்ளேயே போய் விடுகிறார். போனதும் கண்ட காட்சி தான் குத்து விளக்கு எரிகின்ற அறையின் கோலாகலக் காட்சி! 66 குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய் " இந்தப்பாடலைத்தான் அந்தக்கசங்கிய தாளில் நான் படித்துப் பார்த்தேன். அய்யோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடை யோரம் அப்படியே சப்ரகூட மஞ்சமாகி விடக்கூடாதா எனக்குப் பக்கத்திலே ஒரு பெண் குப்பைத் தொட்டிவந்து சேரக் க3

?